தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 26 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
குழப்பத்துடன் மேஜை மீதிருந்த ரெஸ்யூம்களை பார்த்த நந்திதா, ஒரு முடிவுடன், நாகுவை இன்டர்காமில் அழைத்தாள்.
“நாகு, நான் நந்திதா... லைட்டா தலை வலிக்குற மாதிரி இருக்கு, நான் ஹாஃப் டே லீவ் எடுத்துக்கவா? இந்த ரெஸ்யூம்ஸ் எல்லாம் மன்டே வந்து பார்க்கிறேன்...”
“அதை எல்லாம் மெதுவா பார்த்தால் போதும் நந்து... யூ டேக் கேர் ஆஃப் யுவர்செல்ப்...”
“தேங்க்ஸ் நாகு... அப்போ நான் கிளம்புறேன்... சீ யூ ஆன் மன்டே தென்...”
விட்டால் போதும் என்பது போல அவசர அவசரமாக பேகை எடுத்துக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்த நந்திதாவிற்கு, எங்கே போவது என்று குழப்பமாக இருந்தது.
நேராக துளசியின் வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை...
துளசி என்ன, என்ன என்று கேட்டு துளைத்து எடுத்து விடுவாள்!!!
வேறு எங்கே செல்வது...
சென்னை அவளுக்கு புதிதில்லை... ஆனால் கடந்த சில வருடங்களில் அவள் பார்க்காமல் விட்டு போன விஷயங்கள் நிறைய இருக்கிறதே.
ஒரு முடிவுடன், எதிரே வந்த ஆட்டோவை கையை காட்டி நிறுத்தினாள்.
❀✿❀✿❀✿
நந்திதா வீடு வந்து சேர்ந்த போது மாலை ஆறாகி இருந்தது.
தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த துளசி கை நிறைய பொட்டலங்களுடன் வந்த