“உதயா???”””
நந்திதாவின் குரலில் அப்படி ஒரு ஆச்சர்யம்!
எழுந்து கைகளை தட்டி விட்டு, தலை முடியை சரி செய்து, அணிந்திருந்த டீ ஷர்ட்டை இழுத்து விட்டு விட்டு, துளசியிடம் இருந்து ஃபோனை வாங்கி, “ஹலோ உதய்...” என்றாள் அவசரமாக.
“ஹாய் நந்திதா, உங்களுக்கு தலைவலின்னு நாகு சொன்னாங்க... ஹவ் ஆர் யூ?”
“இப்போ சரி ஆச்சு உதய்... தேங்க்ஸ்... நீங்க ஃபோன் செய்து கேட்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை...”
“நான் தான் சொன்னேனே நாம எல்லாம் ஒரு ஃபேமிலி போலன்னு... சரி ரெஸ்ட் எடுங்க... ஹாவ் அ நைஸ் வீக் என்ட்...”
“தேங்க்ஸ் உதய், விஷ் யூ தி சேம்... பை...”
தோழியின் பேச்சை கவனிக்காதது போல கவனித்துக் கொண்டிருந்த துளசி, அவள் ஃபோனை கீழே வைக்கவும், “ஏன் நந்து அதென்ன வீடியோ காலா?” என்றுக் கேட்டாள்.
“இல்லையே, ஏன் கேட்குற?” என புரியாமல் கேட்டாள் நந்திதா.
“உதய் ஃபோன் செய்றான்னு சொன்ன உடனே டிரஸ் சரி செய்ற... தலை முடி சரி செய்ற... வாய்ஸ் கால்’னா அவனுக்கு என்ன இதெல்லாம் தெரியவா போகுது...”
“அது... அது...”
தோழியின் தடுமாற்றம் துளசிக்கு குதூகலத்தை கொடுத்தது...