❀✿❀✿❀✿
உதய் உற்சாகத்துடன் வீட்டினுள் வந்தான்.
அங்கே அவனின் அம்மாவின் அருகே இருந்த அழகிய பெண்ணை பார்த்து புரியாமல் நின்றான்.
“உதய், இது ப்ரியா... என்னோட ஸ்கூல்ல படிச்ச அஸ்வினியோட பொண்ணு...” என சிம்பிளாக புதியவளை அவனுக்கு அறிமுகப் படுத்தினாள் ரேவதி.
உதய் ப்ரியாவைப் பார்த்து நட்புடன் புன்னகைக்க, அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள்.
அழகாக மட்டுமில்லாமல் நல்ல அடக்கமான பெண் போலவும் தான் இருக்கிறாள்...
ஆனால் அம்மாவை பற்றி அவனுக்கு தெரியும் என்பதால், பட்டும் படாமலும், “ஹாய்... ஹலோ....” என்றான் உதய்.
அதற்கு ப்ரியா பதில் சொல்ல அவகாசம் கொடுக்காமல், “ப்ரியா இங்கே நம்ம வீட்டுல தங்க போறா... நான் ஒரு புக் எழுத போறேன்...” என்றாள் ரேவதி.
“புக்கா??? என்னம்மா பெரிய குண்டா தூக்கி போடுறீங்க?” என்றான் உதய் உண்மையான ஆச்சர்யத்துடன்!
“சும்மா விளையாடாதேடா உதி... என் புக்குக்கு ஹெல்ப் செய்ய ப்ரியா இங்கே இருக்க போறா...”
“ஓகே... ரொம்ப நல்லதா போச்சு... என்ஜாய் செய்ங்க...” என்று சொல்லிவிட்டு அவனின் அறைக்கு வந்தான் உதய். ப்ரியா தங்க போவது புக்கிற்காக என்று சொன்னாலும் இது அம்மாவின் வேறு மாதிரி மாஸ்டர் ப்ளானாக இருக்குமோ என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது.