தோழியை கேள்வியாகப் பார்த்தாள்.
“ஒசிமம், உனக்கு ஸ்பெஷலா என்ன வாங்கிட்டு வந்தேன்னு சொல்லு பார்ப்போம்...”
“ஸ்பெஷலாவா, எனக்கா? என்ன வாங்கிட்டு வந்த?”
“இன்னைக்கு காலையில இருந்தே மனசுக்கு ஒரு மாதிரி இருந்தது... ஹாஃப் டே லீவ் எடுத்துட்டு நம்ம காலேஜ் பக்கம் போனேன்...”
“என்னடி நீ! என் கிட்ட சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேனே...”
“நீ, நான், நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமா இன்னொரு நாள் போவோம்... இப்போ அன்ப்ளான்டா நான் திடீர்னு போனேன்... இந்த இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா???? நம்ம காலேஜ் பக்கத்துல இருக்க அந்த சொட்டைஸ் கடைல வாங்கினது...”
கையில் இருந்த பொட்டலங்களை துளசி அங்கே போட்டிருந்த நாற்காலியில் கடை பரப்பினாள் நந்திதா.
“என்னது தேன்மிட்டாயா???”
துளசியின் குரலில் அப்படி ஒரு குதூகலம்!
“யெஸ் உன்னோட தேன் மிட்டாய், கமர் கட், அந்த கேக்.... இதுக்காக நீ எப்படி சண்டை போடுவ...”
“நீ மட்டும் என்னவாம்? கடலை மிட்டாய்க்காக அப்படி அடிச்சுப்ப... அந்த சொட்டை சார் கடை இன்னும் இருக்கா”
இருவரும் பழைய கதைகளில் ஆழ்ந்து போக, நந்திதாவினுள் இருந்த குழப்பங்கள் மெல்ல அவளின் நினைவை விட்டு தற்காலிகமாக விலகி சென்றன.