(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 12 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

சுமித்ராவிற்கு புரியவில்லை! 

   

“சாரியா??” என்றாள் குழப்பத்துடன்.

   

“ம்ம்ம்... ஏதோ விளையாட்டுன்னு நினைச்சு நான் சொன்னது உங்களை பாதிக்கும்னு நான் நினைக்கவே இல்லை,” என்றான் கமல்.

   

“எதை சொல்றீங்க?”

   

“அன்னைக்கு என் பெட்டர் ஹாஃப் அப்படி இப்படின்னு உங்களை சீண்டுறதுக்காக பேசினேனே அதை சொல்றேன்...”

   

அவனை பார்ப்பதும், பக்கத்தில் இருந்த ஜன்னலை பார்ப்பதும் என பார்வையை சுழற்றியபடி இருந்த சுமித்ரா, இப்போது கமலை நேராக பார்த்தாள்... ஆனால் ஒன்றும் பேசவில்லை...

   

“உங்களுக்கு கோபம்னு புரியுது... சாரி... இனிமேல் அப்படி விளையாட மாட்டேன்... உங்களை வருத்தப் படுத்துற மாதிரி எதையும் செய்ய மாட்டேன்...”

   

“க்கும்... ஒரு மண்ணும் புரியலை உங்களுக்கு!”

   

ஒரு வினாடி திகைத்து விழித்தவன், பின் சமாளித்துக் கொண்டு சிரித்தான்...!

   

“ஹையோ, போதும் இளிச்சது! நான் கூட நீங்க சரியான முசுடா இருப்பீங்களோன்னு நினைச்சேன்... பரவாயில்லை இப்படி சீண்டுறதுன்னு... அந்த அளவுக்காவது உங்க கிட்ட ஹ்யூமர் சென்ஸ் இருக்கே! சந்தோஷம்! எனக்கு அது பிடிச்சிருக்கு!!!”

   

கமல் இப்போது மீண்டும் விழித்தான்!

   

“அப்பப்போ இப்படி முழிக்குறது கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தாலும்... பரவாயில்லை... நான் அட்ஜஸ்ட் செய்துக்குறேன்... உங்களை எனக்கு பிடிச்சிருக்கு...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.