(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

மாதிரி ஸ்மைலோட இருக்குற மாதிரி பார்த்துப்பேன்... ஆனால் அது மட்டுமே என் கடமை, பொறுப்புன்னு சொல்ல முடியாது... அம்மா, அப்பா, தம்பி, தங்கை அவங்களோட சந்தோஷமும் எனக்கு முக்கியம்...”

   

“ம்ம்ம்... முக்கியமா இருந்துட்டு போகட்டுமே... யார் வேண்டாம்னு சொன்னா?”

   

“யோசி சுமி... என்னை கல்யாணம் செய்துக்கிட்டா, நீயும் அந்த பொறுப்புகளை சுமக்க வேண்டி இருக்கும்...”

   

“இருக்கட்டும்...”

   

“இல்லை...கல்யாண வாழ்க்கை பத்தி உனக்குன்னு சில ஆசைகள்... எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும்...”

   

சுமித்ரா அவனை நேராக ஒரு பார்வை பார்த்தாள்...

   

“அதை எல்லாம் தப்புன்னு சொல்ல முடியாது... நான் சொல்லவும் இல்லை... ஆனால் எனக்கு வரும் சம்பளத்துல பெரும்பாலான பகுதியை நான் என் குடும்பத்துக்கு செலவு செய்யனும்... மீதியை வச்சு பெரிய வீடு கட்டுறது, அது இது எல்லாம் இப்போ என்னால முடியாது... ஆனால் கொஞ்சம் வருஷம் போனால்...”

   

“நிறுத்துறீங்களா!!!!”

   

சுமித்ராவின் குரல் கேட்டு பேச்சை நிறுத்திய கமல், புரியாமல் அவளை பார்த்தான்...

   

“கமல் சார், ஹேமா உங்க கிட்ட இதெல்லாம் சொல்லி இருக்கான்னு தெரியுது... அதுவும் நல்லது தான்... என்னை பத்தி உங்களுக்கும் முழுசா தெரியுறது நல்லது தானே...! வெறும் பணம், வீடு, வசதி தான் முக்கியம்னு நான் நினைச்சிருந்தா உங்களை விரும்பி இருந்திருக்கவே மாட்டேன்.... முதல்ல உங்க பேரு, ஊரு, சொத்துன்னு எல்லா விபரமும் சேகரிச்சு தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா விரும்பலாமான்னு யோசிச்சிருப்பேன்...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.