(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

ஏதோ சாக்லேட் பிடித்திருக்கிறது என சொல்லும் குழந்தையை போல சுமித்ரா வெகு சாதாரணமாக சொல்லிவிட, கமல் அவளை ஆவல் பொங்க பார்த்தான்...

   

“எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு சுமி...”

   

“அப்படியா கமல்? சந்தோஷம்!!!!”

   

சுமித்ராவின் பதிலில் திகைத்து, அவன் மூன்றாம் முறையாக விழிக்க, சுமித்ரா புன்னகைத்தாள்!

   

“பின்னே, நான் பிடிக்குதுன்னு சொன்ன உடனே நீங்க மட்டும் ‘உன்னை’ன்னு சொல்லலாம், சுமின்னு ஷார்ட்டா என் பேரை கூப்பிடலாம்... நான் மட்டும் அதெல்லாம் செய்யக் கூடாதா???”

   

இப்போது அவளின் புன்னகை கமலையும் தொற்றிக் கொண்டது...

   

“செய்யலாமே... யாரு செய்ய கூடாதுன்னு சொன்னது...! உனக்கு ஒன்னு தெரியுமா சுமி, நான் இது வரைக்கும் யார் கூடவும் இப்படி சிரிக்குற மாதிரி எல்லாம் உட்கார்ந்து பேசினதே இல்லை...”

   

“சும்மா தானே சொல்றீங்க? காலேஜ்ல அரட்டையே அடிக்காமலா இருந்தீங்க?”

   

“காலேஜ் படிச்சப்போவே நான் இரண்டு இடத்துல பார்ட் டைமா வேலை பார்த்தேன்... பேசி, சிரிக்க எல்லாம் டைம் இல்லை...”

   

“ஓ...”

   

“உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சுமி... என் மனசை அலை பாய விட கூடாதுன்னு முடிவு செய்து பெரிய பூட்டா போட்டு வச்சிருந்தேன்... நீ அதை உன் கண்ணை வச்சு... அப்படி ஒரு பார்வை பார்த்தே ஈசியா திறந்துட்ட...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.