(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 05 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

லுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்த சரண்யாவினுள் பல்வேறு உணர்ச்சிகள் அலை மோதிக் கொண்டிருந்தன...!

   

மித்ரனுக்கு கோபியின் கனவு கம்பெனியை விற்றது தவறோ என்ற கேள்வி அதில் மேலோங்கி இருந்தது...!

   

இன்று மட்டுமல்லாமல் மித்ரனை சந்தித்த நாள் முதலாகவே இதே கேள்வி அவளை அலைக் கழித்துக் கொண்டிருந்தது...!

   

சேகரை பொறுத்த வரை மித்ரனுக்கு கம்பெனியை விற்பது தான் சரண்யாவை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்ற கிடைத்த சிறந்த வழி என்பதால் அவர் அவனுக்கே விற்று விட வற்புறுத்தினார்...

   

விருப்பமில்லை என்றாலும், அவள் இருக்கும் நிலையில் உடனே முழு தொகை கொடுத்து கம்பெனியை வாங்கிக் கொள்ளவும், அவளின் நிபந்தனைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் எத்தனை பேர் முன் வருவார்கள் என்ற சந்தேகம் இருந்ததால் சரண்யா சேகரின் திட்டத்திற்கு பெரிதாக மறுப்பு தெரிவிக்கவில்லை...

   

அதனால் வேறு வழி இல்லை என்பதால் அவளும் ஏற்றுக் கொண்டாள்...

   

கம்பெனி கைமாறுவதற்கான வேலைகள் அனைத்தும் துரிதமாக, சரியாக நடைபெற்று முடிந்திருந்தது!

   

இன்று முதல் சரண்யா ஜிஎஸ்’ல் ஒரு ‘எம்ப்ளாயீ’ மட்டுமே... அதுவும் கூட தற்காலிகமானது தான்... மூன்றே மாதங்களுக்கு மட்டுமே...!

   

அதன் பின் அவளுக்கும், கோபியின் கனவு கம்பெனிக்கும் உள்ள சின்ன உறவும் கூட விட்டு போய் விடும்....

   

மேலே யோசிக்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை...!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.