(Reading time: 7 - 14 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 09 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

”சம்யுக்தா நீங்க தப்பான வழியை தேர்ந்தெடுத்துட்டீங்க, யாராவது நியாயம் கேட்க ஒரு தாதாகிட்ட போகனும்னு நினைப்பாங்களா, அதுலயும் உங்கப்பா ஆஸ்பிட்டல்ல எந்த மாதிரியான கன்டிஷன்ல இருந்தாரு, உங்கம்மாகிட்ட கூட நீங்க சொல்லாம கிளம்பி போயிருக்கீங்க, இது அசட்டு தைரியமா இருக்கு, ஒருவேளை உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன செய்திருப்பீங்க, எப்படி உங்களால இப்படி எல்லாம் யோசிக்க முடிஞ்சது” என சிதம்பரம் பொறுமையிழந்து கோபத்தில் பொங்கினான். 

   

அதற்கு அவளோ மெல்லச் சிரித்தாள். அந்த சிரிப்பில் சிதம்பரத்தின் கோபம் தானாக குறைந்தது.

   

”இப்படி சிரிச்சா என்ன அர்த்தம், உங்களுக்கு பயமே வரலையா” என அமைதியாக கேட்டான் சிதம்பரம்

   

”அந்தச் சமயம் எனக்கு நடந்த அநீதி அதனால வந்த கோபம் எதையுமே நான் யோசிக்கலை, அப்பா அம்மாவை பார்த்துக்க மாமா இருக்காரு அந்த தைரியத்தில நான் கிளம்பினேன்”

   

“பின் விளைவு கூடவா நீங்க யோசிக்கலை”

   

”இல்லை நான் எதையுமே யோசிக்கலை, அந்தச் சமயம் என் மைன்ட் முழுக்க ப்ளாக்கா இருந்தது, அதுல தில்லை மட்டும்தான் நிறைஞ்சிருந்தாரு, அவரைப் பார்க்கனும், கேள்வி கேட்கனும், நியாயம் கேட்கனும் இவ்ளோதான் அப்ப எனக்கு தோணிச்சி, பொறுமையா யோசிச்சிருந்தா நான் செய்தது முட்டாள்தனம்னு நினைச்சிருப்பேன் ஆனா, அந்தச் சமயம் நான் யோசிக்க கூட இல்லை, நான் செய்றது சரின்னு நினைச்சி அங்க போனேன் ஆனா, அங்க போன பின்னாடி நான் எவ்ளோ பெரிய தப்பு செஞ்சேன்னு தெரிஞ்சிக்கிட்டேன், அந்த தப்புல இருந்து மீள முடியாம நான் இப்ப வரைக்கும் கஷ்டப்படறேன்”

   

”அப்படி என்னாச்சி, அவன் உங்களை ஏதாவது செஞ்சானா மிரட்டறது வேற ஏதாவது சம்திங்” என சிதம்பரம் உள்ளுக்குள் டென்ஷனாக இருந்துக் கொண்டே கேள்வி கேட்க அவளோ

   

”இல்லை” என்றாள்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.