”இல்லை தில்லைங்கற ஒரு மனுஷனை பார்க்கனும்” என்றாள் வெறுப்பாக
”அம்மா அவரு எங்க இருப்பாருன்னு சொன்னாதானே நான் கூட்டிட்டுப் போக முடியும்” என கேட்க அவளோ
”காரை நிறுத்துங்க” என்றாள் சட்டென
”அம்மா”
”காரை நிறுத்துங்கன்னு சொன்னேன்” என கடுமையாகச் சொல்ல அவரும் வண்டியை ஓரமாக நிறுத்த வண்டியை விட்டு இறங்கி நின்றாள் சம்யுக்தா,
மாலை நேரம் இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிவிடும், அந்நேரம் அவள் தனியாக ரோடில் நடந்தாள். மணப்பெண் கோலத்தில் 100 சவரன் நகைகளை அணிந்துக் கொண்டு கையில் தாலியுடன் கண்ணில் வெறித்தனமுடன் சென்றவளை கண்ட பொதுமக்கள் வியப்பாக பார்க்க, டிரைவரோ அவள் பின்னாலேயே கவலையுடன் சென்றான்.
அந்தச் சமயம் அவளின் பக்கத்தில் ஒரு ஆட்டோ தானாகவே வந்து நின்றது
”மேடம் எங்க மேடம் போகனும், வாங்க மேடம் ஆட்டோ காலிதான் வாங்க ஏறுங்க” என அழைக்க அவளோ ஆட்டோவில் ஏறிக் கொண்டு
”தில்லையை பார்க்கனும், இந்த ஊர்ல யாரைக் கேட்டாலும் சொல்வாங்கன்னு சொன்னாங்க, அந்த தில்லைங்கற தாதாகிட்ட என்னை கூட்டிட்டுப் போங்க” என அதிகாரமாகச் சொல்ல ஆட்டோ டிரைவர் அவளை ஏற இறங்கப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு வண்டியை கிளப்பினான்.
அதைக் கண்ட அவளின் கார் டிரைவரோ அவசரமாக காரில் ஏறி ஆட்டோவை பாலோ செய்தார்.