”ஓ அப்புறம்”
”இது வேற மாதிரியான கஷ்டம்”
”அப்ப உங்களுக்கு அவன் நியாயம் வழங்கலையா”
”வழங்கினாரு ஆனா, நானே எதிர்பார்க்காத மாதிரி வழங்கினாரு”
”முதல்ல உங்களால தில்லையை பார்க்க முடிஞ்சதா, ஏன்னா அவன் பெரிய தாதா அவனை அவ்ளோ ஈசியா யாராலயும் பார்க்க முடியாது, போலீஸ் அவனை பிடிக்கவே எவ்ளோ கஷ்டப்பட்டிருக்காங்கன்னு ரிக்கார்டு சொல்லுது உங்களால எப்படி” என இழுக்க
”எனக்கு அப்படி தோணலை ஒருவேளை தில்லையே என்னை சந்திக்கனும்னு இருந்தார் போல, அதனால அவரை தேடி நான் எங்கயும் அலையலை சுலபமாவே அவரை என்னால பார்க்க முடிஞ்சது”
“அதான் எப்படி” என ஆர்வமாக கேட்டான் சிதம்பரம் அதற்கு சம்யுக்தாவோ கண்கள் மூடினாள்.
கண்களுக்குள் அன்றைய நிகழ்வுகள் வரவே அதை அப்படியே சொல்லலானாள், சிதம்பரமும் அதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தான்.
சிதம்பரம் ஊர் வந்ததும் சம்யுக்தாவின் கார் ஊருக்குள் சென்றது. இதற்கு மேல் எங்கு செல்வதென தெரியாமல் டிரைவர் சம்யுக்தாவிடம்
”சின்னம்மா சிதம்பரம் வந்துடுச்சிங்க, இனி அடுத்து எங்க போகனும்” என கேட்க அவளோ அதுவரை பயணத்தின் போது வரும் அசதி கூட இல்லை கோபம்தான் இருந்தது.
”தில்லையை பார்க்கனும்”
”தில்லையா கோயிலுக்கு போகனும்ங்களா“