ஆட்டோவும் ஊருக்கு வெளியே செல்லவில்லை, ஊருக்குள்ளேயே சென்றது. ஆள் நடமாட்டம் இருந்த அனைத்து தெருவுக்குள்ளும் வளைந்து நெளிந்து சென்றது.
அரை மணி நேரத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு இருந்த பகுதிக்குச் சென்றது, அங்கோ மக்கள் மாலை வேளை என்பதால் அதிகமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் ஆட்டோ செல்ல ஆட்டோவிற்கு பின்னால் அவளின் கார் சென்றது.
முடிவில் ஒரு 5 அடுக்கு அப்பார்ட்மென்ட் முன்பு ஆட்டோ நின்றது. அவளோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு டிரைவரிடம்
”தாதா தில்லையை பார்க்கனும்னு சொன்னேன், இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க“
”அவர் ஏரியாதான்ங்க இது, சத்தமாக பேசாதீங்க இறங்குங்க” என சொல்ல அவளோ ஆச்சர்யப்பட்டாள்
தாதா என்றால் பெரிய பங்களா போன்ற வீட்டில் இருப்பான், ஏகப்பட்ட செக்யூரிட்டிகளும் இருப்பார்கள், கண்டிப்பாக ஊருக்கு வெளியே இருப்பான், 40, 50 அடியாட்களுடன் இருப்பான் என நினைத்தால் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடத்தில் இருப்பது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது, அமைதியாக இறங்கினாள். அவளை அழைத்துக் கொண்டு சென்றான் ஆட்டோ டிரைவர், அப்பார்ட்மென்ட் கேட்டில் இருந்த ஒருவன்
”ஏய் ஏய் இரு இரு என்ன விசயம்” என டிரைவரை நிப்பாட்டிக் கேட்க அவனோ
”அண்ணே இவங்க தில்லை அண்ணனை பார்க்கனும்னு சொன்னாங்க, அதான் கூட்டிட்டு வந்தேன்“
”கூட்டிட்டு வந்து விட்டாச்சில்ல இனி நாங்க பார்த்துக்கறோம் நீ கிளம்பு போ” என விரட்ட டிரைவர் விட்டால் போதுமென காசு கூட வாங்காமல் ஆட்டோ ஏறிச் சென்றுவிட அவளின் கார் டிரைவர் காருடன் அவ்விடம் வந்து நின்றார், காரைக் கண்டதும் அங்கிருந்த ஆளோ