அவனின் கேள்வி + தோரணையை விட, அவன் நேராக அவளை ஒருமையில் பேசியது சரண்யாவிற்கு பிடிக்கவில்லை.
அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்ற படி, கையில் இருந்த கடிகாரத்தை பார்த்து, “நைன் தர்ட்டி ஃபைவ்...” என்றாள்.
மித்ரனை எப்படி அழைப்பது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது....
அவளை ஒருமையில் அழைத்தவனை, ‘சார்’ என்று மரியாதையுடன் அழைக்க அவளுக்கு பிடிக்கவில்லை...
அதற்காக மித்ரன் என்று பெயர் சொல்லவும் முடியவில்லை... அது அவளின் பழக்கமும் இல்லை... அங்கே வேலை செய்யும் அவளை விட மூத்தவர்களை அண்ணா, அக்கா என்று அழைத்தே அவளுக்கு பழக்கம்... பெயர் சொல்லி அழைத்து பழகியதில்லை...
அவளின் யோசனையை கிழித்துக் கொண்டு ஒலித்தது மித்ரனின் கணீர் குரல்.
“உன் வாட்ச் 4 மினிட்ஸ் ஸ்லோ.... இப்போ கரக்ட் டைம் நைன் தர்ட்டி நைன்...”
“ஓ... சாரி....”
“ஐ டோன்ட் நீட் யுவர் சாரி... ஆஃபிஸ் டைம் என்னன்னு உனக்கும் தெரியும் தானே...?”
சரண்யாவிற்கு எப்படியோ, அங்கே இருந்த உமாவிற்கு அவள் முன் மித்ரன் சரண்யாவிடம் அப்படி கடுமையாக பேசியது சங்கடப் படுத்தியது. எனவே, “சார், நான் போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரட்டுமா??” என்றுக் கேட்டாள்.
“ஹலோ, இங்கே நீ பாஸா நான் பாஸா???” என மீண்டும் உறுமினான் மித்ரன்!