சாத்தி இருந்த கதவை மெல்ல தட்டி, மித்ரனின், ‘கம் இன்...’ கேட்டதும் உள்ளே சென்றாள்.
அங்கே ஸ்டெனோகிராஃபர் உமா மித்ரன் சொல்லிக் கொண்டிருந்ததை நோட்பேடில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்..
உரிமையாளனாக வந்த சில மணி நேரங்களிலேயே அங்கே நடக்கும் அனைத்தையும் மித்ரன் கையகப் படுத்தி இருப்பது சரண்யாவிற்கு புரிந்தது... அவனின் வேகம் அவளுக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது...
அவள் யோசனையுடன் நிற்க, மித்ரன் அவள் பக்கம் பார்த்தான்.
அவனை தொடர்ந்து சரண்யாவை கவனித்த உமாவும், முகம் மலர எழுந்து நின்று சரண்யா அமர நாற்காலியை இழுத்து போட்டுக் கொடுத்தாள்...
“தேங்க்ஸ் உமா...” என்றபடி அமர்ந்த சரண்யா, மித்ரன் பக்கம் பார்த்தாள்...
அவன் முகத்தில் எப்போதும் இருப்பதை விட கூடுதல் கடுகடுப்பு இருப்பதாக தோன்றியது...
அதை பற்றி அதிகம் யோசிக்காமல் விட்டவள், என்ன சொல்லி பேச்சை தொடங்குவது என்று யோசித்தாள்... ஒன்றும் புரியவில்லை... குட் மார்னிங் சொல்லலாமா???
அவள் அதிகமாக யோசிக்க அவசியமில்லாமல் மித்ரனே பேச்சை துவங்கினான்.
“டைம் என்ன?”
அமைதியான இரவு நேரத்தில் அதிர வைக்கும் இடியை போல இருந்தது அவனின் குரல்.
சரண்யா உடனே பதில் சொல்லாமல் இருக்க,
“உன்னை தான் கேட்கிறேன்... டைம் என்ன?” என்று மீண்டும் கேட்டான் மித்ரன்.