(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

“பரவாயில்லையே... நாம நல்ல மேட்ச் தான்... நீங்க கண்ணழகன், நான் கண்ணழகின்னு வச்சுப்போம்...”

   

“கண்ணுன்னு இல்லை... உன் கிட்ட எல்லாமே அழகு தான் சுமி...”

   

“ஹோ ஹோ...!” 

   

எப்போதும் போல கலாட்டாவாக சொல்ல நினைத்தாலும், சுமித்ராவின் குரல் குழைந்து மெல்ல ஒலித்தது...

   

அவளையும் மீறி தோன்றிய வெட்கத்தில் கன்னங்கள் மெல்ல சிவந்தன....

   

அவளிடம் தோன்றிய அந்த மாற்றத்தை ஒரு சில வினாடிகள் இமைக்காமல் பார்த்து ரசித்த கமல்,

   

“உன் சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம் சுமி... நீ எப்போவுமே சந்தோஷமா இருக்கனும்னு நான் ஆசைப் படுறேன்...” என்றான்.

   

“என் வாழ்க்கை உங்களோடன்னு சொல்லியாச்சு... அப்புறம் என்ன, நீங்க என்னை சந்தோஷமா பார்த்துக்கோங்க...”

   

“இல்லை சுமி... நான் சில விஷயங்கள் உன் கிட்ட சொல்லனும்...”

   

“சொல்லுங்க...”

   

“எங்க வீட்டுல எனக்குன்னு சில பெரிய பொறுப்புகள் இருக்கு... நானா எடுத்துக்கிட்ட பொறுப்புகள் தான்... கொஞ்சம் முன்னாடி சொன்னேனே மனசை பூட்டி வச்சிருந்தேன்னு... அதுக்கு முக்கிய காரணம் அது தான்... கல்யாணம்னு ஒன்னு ஆனாலும் அதனால் என்னுடைய பொறுப்புகள் அதிகமாகுமே தவிர குறையாது... நமக்கு கல்யாணம் ஆனதும் உன்னை இதே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.