(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

“நான் தப்பா சொல்லலை சுமி... உன் ஆசைகள் எனக்கு புரியுது... ஆனால்...”

   

“இருங்க இருங்க... நான் சொல்லி முடிச்சிடுறேன்... நான் நிறைய ஆசை வச்சிருந்தது நிஜம் ஆனால்... உங்க அம்மாக்கு ஒன்னும் ஆகாதுன்னு சொன்ன உடனே, என்னை பாவமா ஒரு பார்வை பார்த்தீங்க பாருங்க அப்போவே அந்த ஆசை எல்லாம் போயிடுச்சு... உங்க மேல ஆசை வந்திடுச்சு... போதுமா...?”

   

“சுமி.... என்ன சொல்லன்னே எனக்கு தெரியலை...”

   

“ஏன் கமல் அன்னைக்கு அப்படி பார்த்தீங்க??? என்னவோ அப்படி யாருமே உங்க கிட்ட பேசாத மாதிரி...? ஏன்? உங்க அம்மா... அத்தை... அப்படி பேச மாட்டாங்களா?”

   

அவள் அம்மா என்று சொல்லி விட்டு அத்தை என்று மாற்றி அழைத்ததில் தெளிவாக அவளின் மனம் புரிந்து விட கமலின் முகல் மலர்ந்தது...

   

ஆனாலும் அவளின் கேள்விக்கு பதில் சொல்ல அவனுக்கு தயக்கமாக இருந்தது...

   

“ப்ச்... மாட்டாங்கன்னு இல்லை...”

   

“என் கிட்ட சொல்ல என்ன இவ்வளவு யோசிக்குறீங்க கமல்? உங்களை முழுசா புரிஞ்சுக்க ஆசைப் படுறேன்... அதான் கேட்குறேன்... சொல்லுங்க...”

   

“உன் கிட்ட சொல்ல கூடாதுன்னு எதுவும் இல்லை சுமி... சில சமயம் எல்லாம் இருக்கும் ஆனால் எதுவும் இருக்காது... அப்படி தான் என் நிலைமை... அப்பா இருக்கார்... ஆனாலும் அவர் இடத்துல இருந்து எல்லாம் நான் செய்ய வேண்டிய நிலைமை... அம்மா இருக்காங்க ஆனாலும் நான் அன்புக்கு ஏங்கி நிக்க வேண்டிய நிலைமை...”

   

“எனக்கு புரியலையே....”

   

“சுமி, நான் பிறந்து ஒரு வருஷத்திலேயே என் தம்பி பிறந்துட்டான்... அம்மாவால எங்க 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.