என்னவாக இருக்கும் என்று யோசித்தவளின் பார்வையில் முருகனுக்கு எதிரே அமர்ந்திருந்த சத்யா தெரிந்தான்! அவன் பக்கம் வியப்புடன் ஒரு மின்னல் பார்வை பார்த்து விட்டு மீண்டும் முருகன் பக்கம் பார்த்தாள் தேன்மொழி.
"தேன்மொழி, உங்க மேல் நான் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்...? சத்யா சார் கம்பெனிக்கு தேவையான டாகுமென்ட்ஸ் எல்லாம் புதன் கிழமைக்குள்ளே போய் சேரனும்னு லாஸ்ட் வீக்கே எல்லோருக்கும் தெளிவா இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தேன்... என்ன இது இன்னும் உங்க டிபார்ட்மெண்ட்டில் இருந்து சத்யா சார் கம்பெனிக்கு போக வேண்டிய டாகுமென்ட்ஸ் எல்லாம் போகலையாமே?”
"சாரி சார்... வேற சில அவசர வேலை இருந்தது. நந்தினி வேற லீவ்ல இருக்காங்க... அதான் லேட் ஆயிடுச்சு..." தயக்கத்துடன் சொன்னாள் தேன்மொழி.
"இது போல் சாக்கு சொல்றதை நிறுத்துங்க தேன்மொழி... உங்க கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை... இன்னைக்கு ஈவ்னிங் உள்ள எல்லா பேப்பர்ஸும் போயிருக்கனும்... புரியுதா!"
முருகன் கடுமையும் கண்டிப்புமாக சொன்னதை ஆமோதிப்பவளாக தலை அசைத்து, "ஓகே சார்," என்றாள் அவள்!
சத்யா பக்கம் மீண்டும் பார்க்கவும் மனம் வராது, சற்றே கன்றிய முகத்துடன் தேன்மொழி அறையிலிருந்து செல்லவும், சத்யாவிற்கு என்னவோ போல இருந்தது! அவனின் எதிரில் இருந்த முருகன் மீது கோபமாகவும் வந்தது!
"இன்னைக்கே வேணும்னு இல்லை சார்... திங்கள் கிடைச்சாலும் ஓகே..." என்றான் வித்தியாசமான குரலில்!
முருகன் அவனின் குரல் மாற்றத்தை கவனித்ததாகவே தெரியவில்லை! தேன்மொழி சென்ற பக்கம் ஒரு பார்வை பார்த்தவர், "அது பரவாயில்லை சத்யா... தேன்மொழி கிட்ட இன்னைக்குள்ளே வேணும்னு நான் சொல்லலைனாலும், அவங்க இன்னைக்கே முடிச்சு கொடுத்திருவாங்க... ஷீ இஸ் சூப்பர் ஸ்மார்ட்! உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லட்டுமா,