Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 14 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“இந்தா சுமி...”
ஹேமா அவளை அழைக்கவும், நினைவுகளில் இருந்து மீண்டு வந்த சுமித்ரா, தோழி பக்கம் திரும்பி, அவள் நீட்டிய காகிதத்தை கையில் வாங்கி பார்த்தாள்.
அந்த காகிதத்தில் டாக்டர்களுக்கே உரிய கிறுக்கல் கையெழுத்தில் ஏதேதோ எழுதி இருந்தாள் ஹேமா...
“என்னடி டெஸ்ட்ன்னு சொல்லிட்டு இப்படி ஸ்கூல் டெஸ்ட் போல இவ்வளோ எழுதி இருக்க... பார்த்து... திடீர்னு, சினிமால வர மாதிரி, ஆறு மாசம் தான் உயிரோட இருப்பேன்னு சொல்லிடாத...”
சுமித்ரா எப்போதும் போல விளையாட்டுத்தனமாக சொல்ல, ஹேமா அதிர்ந்து போய் தோழியை பார்த்தாள். பின் சுதாரித்துக் கொண்டு,
“அறிவு இருக்கா உனக்கு? எதுல எல்லாம் விளையாட்டுன்னு இல்லை? ஒழுங்கா நாளைக்கு போ... நான் டெஸ்ட் ரிசல்ட் வந்தப்புறம் உன் கிட்ட பேசுறேன்,” என்றாள்.
❀✿❀✿❀✿
“என்னம்மா என்ன ஆச்சு?” என்ற கேள்வியைக் கேட்டபடியே வேகமாக வீட்டினுள் நுழைந்தான் ராகுல்.
கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த அவனின் அம்மா பார்வதி,
“எனக்கு ஒன்னும் புரியலைடா ராகுல்... ஹேமா திடீர்னு வந்தா, ஒன்னும் சொல்லாம ரூம் உள்ளே போயிட்டா... சாதாரண நாளா இருந்தா நானும் அமைதியா இருந்திருப்பேன்.. இப்போ குழந்தையோட இருக்கா... எப்படி சும்மா இருக்கிறது...? ஒரு நூறு தடவை கதவை தட்டிட்டேன்... அத்தை அப்புறமா பேசுறேன்... ப்ளீஸ்... ப்ளீஸ்ன்னு மட்டும் சொல்றா... குரலே சரி இல்லை... ஹாஸ்பிட்டல் கேஸ் எதுவோ என்னவோ... கொஞ்சம் என்னன்னு கேளுப்பா