பத்தி யோசிடா... அழாதே...”
ஹுஹும்... ராகுலின் பேச்சு எதுவுமே ஹேமாவின் காதில் ஏறியதாகவே தெரியவில்லை.
ஆனாலும் விடாமல், மென்மையாக அவளின் முதுகை தடவிக் கொடுத்த படி,
“என்னடா... என்ன நடந்துச்சு??? ஹாஸ்பிட்டல்ல ஏதாவது...?” என்று மீண்டும் கேட்டான் ராகுல்.
பதில் சொல்லாமல் ஒரு சில பல வினாடிகள் தொடர்ந்து விசும்பிய ஹேமா, பின், அருகே இருந்த டீப்பாயின் மீதிருந்த ஒரு கடித உறையை எடுத்து கணவனிடம் நீட்டினாள்.
வலது கையில் அதை பெற்றுக் கொண்டாலும், இடது கையை மனைவியை சுற்றியே வைத்திருந்த ராகுல், ஒரு கையாலேயே முயன்று உள்ளே இருந்த பேப்பரை எடுத்து பார்த்தான்.
அது மெடிகல் லேபில் இருந்து வந்திருந்த டெஸ்ட் ரிப்போர்ட்.
அதில் இருந்தவற்றை படித்து விட்டு பேஷன்டின் பெயர் இருக்கும் இடத்தைப் பார்த்தவன், அங்கே சுமித்ரா என்று இருக்கவும் அதிர்ந்து தான் போனான்!!!
ஹேமா எதனால் மனமுடைந்து போயிருக்கிறாள் என்பதை உடனேயே அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
“ஹேமா...!!!” நம்ப முடியாமல் ஒலித்த ராகுலின் அழைப்பே அவனுக்கும் விபரம் புரிந்து விட்டதை சொல்ல, அவனுடன் மேலும் ஒண்டிக் கொண்டு விசும்பினாள் ஹேமா.
“என்னால நம்பவே முடியலை ராகுல்... சுமிக்கு போய்... அவ... அவ...” மேலே பேச முடியாமல் அவள் தொடர்ந்து விசும்ப, ராகுல் அவளை இன்னும் அதிகமாக அணைத்துக் கொண்டான்.
மீண்டும் டெஸ்ட் ரிபோர்ட்டை பார்த்தவனின் உதடுகள், “ஸ்டேஜ் 4,“ என்று முணுமுணுத்தது.