(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

ராகுல்,” என்று கெஞ்சாத குறையாக அவனிடம் சொன்னாள்...

   

சாதாரண மக்களை போல அல்லாமல் மருத்துவ துறையில் இருப்பவர்கள் பிறப்பு – இறப்பு, சந்தோஷம் – துக்கம், வெற்றி – தோல்வி என அனைத்தையும் தினம் தினம் சந்திக்க வேண்டி இருக்கிறது...

   

என்ன தான் மனதை திடப் படுத்தி வைத்திருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே... சில சமயங்களில் மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்கள அவர்களின் மனதையும் பாதிக்க தான் செய்கின்றன...

   

ஹேமா திடமான மனதை பெற்றவள் என்பது ராகுலுக்கு தெரியும். மருத்துவமனையில் நடப்பதை முடிந்த அளவில் அங்கேயே விட்டு வருபவள்.

   

சில நேரங்களில் அவளின் மனத் தெளிவை பார்த்து அவனே ஆச்சர்யப் பட்டிருக்கிறான்!

   

அப்படியே மனதை பாதிக்கும் சம்பவம் நடந்தாலும், ஹேமா அவனிடம் பகிர்ந்துக் கொள்வாளே தவிர, இப்படி கதவை மூடிக் கொண்டு எல்லாம் இருக்க மாட்டாள்...

   

இன்று என்ன இது புதிதாக, என்று யோசித்தபடியே நடந்தவன், பெட்ரூமின் கதவை தட்டாமல், அவனிடம் இருந்த மாஸ்டர் சாவி கொத்தை கொண்டு கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான்.

   

அங்கே சோஃபாவில் கால்களை மடக்கி அமர்ந்து கண்கள் சிவக்க கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி!

   

“ஹேய் என்ன ஆச்சு?”

   

கேட்டபடி அவளின் அருகே ராகுல் அமர்ந்தது தான் தாமதம், அவனைக் கட்டிக் கொண்டு அழ தொடங்கினாள் ஹேமா!

   

“ஹேமா... நீ என்ன சின்ன குழந்தையா?? என்ன ஆச்சுன்னு சொல்லு... நம்ம குழந்தையை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.