ஹேமாவின் விசும்பல் அதிகமாகவும், கையில் இருந்த ரிப்போர்ட்டை மீண்டும் டீப்பாயின் மீது வைத்து விட்டு தன் முழு கவனத்தையும் அவள் பக்கம் திருப்பினான் ராகுல்.
தொடர்ந்து வந்த நிமிடங்களில் விசும்பலுடன் சுமித்ராவுடனான தன் நட்பை பற்றியும், அவள் ஹாஸ்பிட்டல் வந்ததை பற்றியும் சொல்லிக் கொண்டே போனாள் ஹேமா.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட ராகுல்,
“இதுல நீ செய்யக் கூடியது ஒன்னும் இல்லையே ஹேமா... அழுதா ஏதாவது மாறுமா???” என்றான் மென்மையாக.
ஹேமாவின் அழுகை நின்றிருந்தது... ஆனாலும், இப்போதும் ராகுலின் மீதே தன் முகத்தை புதைத்துக் கொண்டிருந்தாள்...
“சில விஷயங்கள் நம் கையில் இல்லடா... நாம யாரும் கடவுளா இருக்க முடியாது...”
“எனக்கு ஒண்ணுமே புரியலை ராகுல்!”
“இனி என்ன செய்றதுன்னு யோசிடா... ரிசல்ட்ஸ் பத்தி சுமித்ரா கிட்ட பேசிட்டியா???”
“இல்லை... எனக்கு அந்த தைரியம் இல்லை ராகுல்... அவ எவ்வளவு ஆசைகள் வச்சிருக்கா, எப்படி எப்படி வாழணும்னு ஆசைப்படுறான்னு எனக்கு தெரியும்... அவக் கிட்ட இன்னும் கொஞ்சம் மாசம் தான் நீ உயிரோட இருக்க போறேன்னு சொல்லி அந்த முகம் மாறுறதை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை...”
“அப்போ பேசாம அவங்க ஹஸ்பன்ட் கிட்ட சொல்லு...”
“கமல் கிட்டேயா?”
“ம்ம்ம்... யார் கிட்டேயாவது சொல்லி ஆகணும்ல ஹேமா... ஃப்ரென்ட்ன்னு மட்டுமில்லாம ஒரு