(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 07 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ரண்யா மித்ரனுக்கு கீழே வேலை செய்ய தொடங்கி பதினைந்து நாட்கள் ஆகி இருந்தது.

   

எப்போது, என்ன, ஏது, என்று கணிக்க முடியாத அவனின் கோபங்களும், அருகே யார் இருக்கிறார், எந்த இடத்தில் இருக்கிறோம் என்று பாராமல் கண்மூடித்தனமாக பேசும் அவனின் குணமும், அவளை திக்குமுக்காட செய்திருந்தன.

   

சரண்யா அவளே எல்லாவற்றையும் செய்து பழக்கப் பட்டவள் இல்லை.

   

முதலில் பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து, பின் கணவனின் அன்பெனும் நிழலில் வாழ்ந்திருந்தவள்.

   

கோபியின் மறைவு அவள் எதிர்பாராத பேரதிர்ச்சியாக வந்து சேர்ந்தது. ஆனாலும் மனம் தேறி, முதல் முறையாக அவளே முன் நின்று கம்பெனியை நடத்த தொடங்கி இருந்தாள்.

   

வியாபாரத்தின் நுணுக்கங்களை முழுவதுமாக அறிந்திராதவள் என்பதாலும், கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தாலும், அங்கே வந்த லாபத்தில் தனக்கு வேண்டிய அளவு தொகையை எடுத்துக் கொண்டு மீதியை பகிர்ந்துக் கொடுத்து பழகி இருந்தாள்.

   

அந்த வருமானமும், வாழ்க்கையுமே அவளுக்கு போதுமானதாகவும் இருந்தது.

   

கற்பகதிற்காக அந்த இன்சூரன்ஸ் பணத்தை அவள் வேண்டாம் என்று சொல்லாமல் இருந்திருந்தால்... அது அவளின் கையில் கிடைத்து இருந்திருந்தால், கம்பெனியின் லோனை அடைத்திருந்திருக்கலாம்! மித்ரனுக்கு கம்பெனியை விற்க வேண்டிய அவசியம் ஏற்படாமலும் போயிருந்திருக்கும்!

   

ஆனால், அந்த பணம் கதிரேசன் – கற்பகத்திற்கு போய் சேர்ந்ததில் அவளுக்கு பெரிய வருத்தமும் இல்லை...

   

முன்பே அந்த பணத்தை அவர்களிடமே கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.