(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

அவர்களுக்கு முன்பே மற்ற டிபார்ட்மென்ட்களில் வேலை செய்யும் ஆறு பேர் அங்கே இருந்தார்கள். அவர்கள் அனைவருமே சரண்யாவை பார்த்ததும் மதிப்புடன் புன்னகை புரிந்தார்கள்!

   

அதற்கு மாறாக, சரண்யாவை பார்த்ததும் மித்ரனின் புருவங்கள் மெல்ல ஏறி இறங்கியது.

   

“சரண்யா!”

   

மித்ரன் அழைக்கவும், இப்போது எதற்கு கத்த போகிறான் என்ற யோசனையுடன் அவன் பக்கம் பார்த்தாள் சரண்யா.

   

“மீட்டிங்க்ன்னு ஒன்னு நடத்தால் யார் வேணா வர இதென்ன ரோட்டுல நடக்குற பப்ளிக் மீட்டிங்கா???”

   

என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் விழித்தாள் சரண்யா!

   

“உன்னை தான் கேட்கிறேன்... ஆன்சர் மீ,” என்றான் மித்ரன் வழக்கமான ஏளனத்துடன்!

   

கேள்வி புரிந்தால் தானே பதில் சொல்ல!!!! என்ன சொல்வது என்று புரியாமல், குழப்பத்துடன்,

   

“இல்லை...” என்று இழுத்தாள் சரண்யா.

   

“என் மீட்டிங் அட்டென்ட் செய்ய இன்வைட் இருக்கனும். இவங்க எல்லோரையும் நான் வர சொன்னேன்... உன்னை வர சொன்னேனா???”

   

சரண்யா முகம் கன்ற அமைதியாக நின்றாள்!

   

“இது, இந்த கம்பெனியோட ஃப்யூச்சர் பத்தி ப்ளான் செய்ற மீட்டிங்... அதுல நீ என்ன செய்ய போற?”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.