(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 13 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

வீடா இது ஸ்டோர் ரூம் மாதிரியிருக்கு, பொருளெல்லாம் இறைஞ்சிக்கிடக்கு, இதை வீடுன்னு சொல்லாதீங்க“ என்றாள் காட்டமாக அவனும் சுற்றிலும் பார்த்துவிட்டு

   

”பேச்சிலர் வீடுன்னா கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும், ஏதோ ஹால் மட்டும் இந்தளவு சுத்தமா இருக்கு, உள்ள ரூம் ரொம்ப அழுக்கா இருக்கும் உள்ள போயிடாத சரியா” என சொல்ல அவளோ

   

”இந்த வீடு இந்த இடம் உங்களோட இந்த கெட்டப் எல்லாம் நாடகம், மத்தவங்களை ஏமாத்த செய்றீங்க, என்னை உங்களால ஏமாத்த முடியாது”

   

”சரிம்மா நான் நாடகமே போடறதா வைச்சிக்க ஆமா நான் தாதாதான், கெட்டவன்தான், மோசமானவன்தான் போதுமா இப்ப என்ன வேணும் உனக்கு கிளம்பு இங்கிருந்து”

   

”நான் ஏன் போகனும், எனக்கு நீங்க நியாயம் கொடுக்கப் போறீங்களா இல்லையா” என கோபத்தில் பொங்கிவிட அவனுக்கு அலுப்பே வந்தது.

   

”இதப்பாரு போலீசுக்கு போறதாயிருந்தா சொல்லு நானே வழி சொல்றேன், போ போய் போலீசோட வா, என் மேல கேஸ் போடு, கோர்ட்ல நிப்பாட்டு, அதுல இருந்து எஸ்கேப் ஆகற வழி எனக்குத் தெரியும், முதல்ல என் மேல கேஸ் போட போலீஸால முடியாது, அப்படியே அவங்க போட்டாலும் அதை எப்படி உடைக்கனும்னு எனக்குத் தெரியும், எனக்கும் சில போலீஸ்க்காரங்க நண்பர்களா இருக்காங்க, அவங்க எனக்காக விசுவாசமா இருக்கறவங்க, நான் என்ன சொன்னாலும் செய்வாங்க 

   

நீ என் மேல கேஸ் போட்டன்னா நான் சொன்னதும் அவங்க உன் மேல பொய் கேஸ் போடுவாங்க, என்னால தப்பிச்சிட முடியும் தேவையில்லாம நீதான் கோர்ட் கேஸ்ன்னு அலைவ தேவையா சொல்லு, எனக்கு நிறைய வேலைகள் இருக்கு, நான் என்ன வெட்டிப்பயல்ன்னு நினைச்சியா என் முன்னாடி நின்னு கதை பேசற போ” என விரட்ட அவளோ

   

”மிரட்டற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்” என்றாள் கோபமாக

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.