எல்லாரும் கவலையில் மூழ்கினார்கள்.
சிவரஞ்சனியால் எந்த முடிவையும் எடுக்க இயலவில்லை, ஒரு பக்கம் கணவரின் இந்த நிலைமை, இன்னொரு பக்கம் சம்யுக்தாவின் செயல் இரண்டும் அவரின் மனதை பாதித்தது. உடைந்து போய் அமர்ந்துவிட அவரை அழைத்துக் கொண்டு ஓட்டலில் இருந்த அவரின் தாய் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டார் கைலாசம்
அவர்களும் மனம் உடைந்த நிலையில் இருப்பதைக் கண்ட கைலாசமே பொறுப்பில் இறங்கினார், அவரும் சம்யுக்தாவை அழைத்துவர செல்ல முயல அவரை தடுத்தனர் இருவர், அவர்கள் தில்லையின் ஆட்கள் அதை அவர்களே சொல்லிவிட அவர் பயந்து போனார்.
சம்யுக்தாவின் தந்தை கண் விழிக்கும் வரை அவர்கள் அங்குதான் இருப்பார்கள் என சொல்லிவிட்டனர், யாரையும் விடக்கூடாது, விட்டால் தில்லை மீது போலீஸ் கேஸ் வரை செல்லும் என்பதால் சம்யுக்தாவின் குடும்பத்தினரை தங்களின் கண்காணிப்பில் வைத்திருந்தனர், அவர்களை மீறி கைலாசத்தாலும் சம்யுக்தாவை தேடிச் செல்ல முடியவில்லை.
இங்கோ தில்லையின் அறையில் 5 நிமிடம் வரை அமைதியாக சம்யுக்தாவையே பார்த்தான் தில்லை, அவளும் அவனையே பார்த்தாள். அவனுக்கென்ன அவள் அழகாக இருக்கிறாள், பார்க்க பார்க்க திகட்டவில்லை, கோபமான கண்களைத் தவிர மற்ற அனைத்துமே அழகுதான் என்பதால் ரசித்துக் கொண்டிருந்தான். அவளோ அவனை வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். முடிவில் அவளுக்கே அவனது செயல் பிடிக்காமல் போனது
”நியாயம் கேட்க வந்த பொண்ணை இப்படிதான் ரசிச்சி பார்ப்பீங்களா”
”நானா உன்னை கூப்பிட்டேன், நீயா வந்த, நான் எங்க போனாலும் என் முன்னாடி வந்து நின்னா நான் என்ன செய்றது, உன்னை பார்க்கத்தான் முடியும் வேற எதுவும் செய்யலையேன்னு சந்தோஷப்படு ஏன்னா நான் ரொம்ப டீசன்ட் தாதா புரியுதா” என சொல்ல அவளோ அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டாள்
”மார்க்கெட்டில இருக்கற காய்கறி விக்கறவன் கூட உன்னை விட பெட்டரா இருப்பான்” என சொல்ல அவனுக்கு அவமானமாகிப் போனது. சட்டென தனது தலை முடியை கோதி அதை