அவளுக்கு பசி வேறு, காலையில் இருந்து சாப்பிடவில்லை கோபத்தில் அவள் பேசினாலும் அவளின் வாடிய முகத்தைக் கண்டு இரக்கப்பட்டான் தில்லை
”உனக்கு பசிக்குதுன்னு நினைக்கிறேன் வேணா போய் சாப்பிட்டு வந்து தெம்பா திட்டு, நான் எங்கயும் போக மாட்டேன், எனக்கு காலைல வரைக்கும் எந்த வேலையும் இல்லை, வெட்டிதான் ஆனா, காலையில எனக்கு முக்கியமான வேலையிருக்கு அதுக்காக நான் வேற ஊருக்குப் போகனும், நான் போய் தூங்கறேன் என் பின்னாடியே அலைஞ்சி உன் வாழ்க்கையை இழக்காத, நீ எதிர்பார்க்கற நியாயத்தை என்னால தரமுடியாது, உன்னால ஆனதை செஞ்சிக்க ஆளை விடு” என சொல்லியவன் உடனே பெட்ரூமுக்கு செல்ல பின்னாடியே கோபமாக சென்றாள் சம்யுக்தா, அவள் தன் பின்னாடியே வருவதைக் கண்டு அதிர்ந்தான் தில்லை
”ஏய் என்ன நீ உள்ள வர்ற, இது என்ன ரூம் தெரியுமா”
”அதுக்கு”
“உன்னை நான் ஏதாவது செஞ்சிடுவேன் போயிடு”
”யாரு நீயா சே உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது” என்றாள் இளப்பமாக
”எனக்கு என்ன ஒர்த் இல்லைன்னு நினைச்சியா, பொண்ணாச்சேன்னு பாவப்பட்டு விடறேன்”
“இல்லைன்னா என்னடா செய்வ“
”டாவா ஏய் நான் யார் தெரியுமா தில்லை“ என கெத்தாக கம்பீரமாக சொல்ல அவளோ
”அதுக்கு என்னடா இப்ப, உன்னை உன் ஊர்ல இருக்கறவங்க வேணா மதிக்கலாம், பயப்படலாம், நான் சென்னை பொண்ணு, என்கிட்ட உன் அதிகாரம் செல்லாது உன்னைப் பார்த்து நான் பயப்படமாட்டேன்” என்றாள்
”தப்பு பண்ணிட்டேன் சிதம்பரத்துக்கு வராம சென்னையில தாதாவாகியிருக்கனும், அப்பதான் நீ