என்னைப் பார்த்து பயந்திருப்ப”
”அப்படியே நீ சென்னையில தாதாவாயிருந்தாலும் உன்னைப் பார்த்து இம்மி அளவு கூட நான் பயந்திருக்க மாட்டேன்” என சம்யுக்தா சொல்ல அவனோ அவளையே ஏற இறங்கப் பார்த்தான்.
”பட்டுப்புடவை ரொம்ப காஸ்டலியா இருக்கே, என்ன விலை இருக்கும் ஒரு ஐம்பதாயிரம் இருக்குமா”
“ஒன்றரை லட்சம்”
“ப்பா காஸ்ட்லிதான் ஆமா இந்த நகையெல்லாம் எவ்ளோ இருக்கும்”
“100 சவரன்”
”ம் அதிகம்தான், இந்த புடவை நகையெல்லாம் கழட்டிட்டா” என அவன் சொல்லும் போதே அவளுக்கு திக்கென்றது, உள்ளுக்குள் பய உணர்வு ஒட்டிக்கொண்டது
”உன்னை இப்படி பார்க்கவே கண்ணு கூசுது, பேசாம இதையெல்லாம் கழட்டிட்டு சாதாரண ட்ரஸ்ல வந்து பேசு நல்லாயிருக்கும் எனக்கும் கண்ணு வலிக்காம இருக்கும்” என தில்லை சொல்ல அவளோ நொந்துப் போனாள்.
மறுபக்கம் மதுரை ஆஸ்பிட்டலில் சம்யுக்தா காணாமல் போகவே குடும்பமே பயந்து விட்டது அனைவரும் தேடலானார்கள். அதில் கைலாசமோ சம்யுக்தா கார் டிரைவருக்கு போன் செய்து விசாரிக்க அவனோ
”சின்னம்மா சிதம்பரம் போகனும்னு சொன்னாங்க, நானும் ஐயாவுக்காகதான்னு நினைச்சி கூட்டிட்டு வந்தேன், இங்க தில்லைங்கற ஒருத்தனை தேடி வந்தது அப்புறம்தான் தெரிஞ்சதுங்கய்யா அவனைப் பத்தி எனக்கு முதல்ல தெரியலை இங்க வந்து பார்த்தா அவன் தாதாவாம் இந்த ஏரியால எல்லாரும் சொல்றாங்கய்யா” என கவலையாக சொல்லவும் கலங்கிவிட்டார் கைலாசம். தான் பேசியதை வைத்து சம்யுக்தா சிதம்பரம் சென்றிருப்பதாக நினைத்து