இருக்க தான் செய்தது. கம்பெனி பேரில் கடன் இல்லாமல் இருந்திருந்தால் அவளுக்கு வேண்டாம் என்று சொல்லி, எப்போதோ அவர்களுக்கே பணத்தை வாங்கி தந்திருப்பாள்.
எது எப்படியோ, பணம் பெரியவர்களுக்கு பயன்பட்டு, கம்பெனி மித்ரனுக்கு மாறி, சரண்யா இப்போது இப்படி ஒரு நிலைக்கு வந்து சேர்ந்திருந்தாள்!
“மேடம்... சரண்யா மேடம்...”
உமாவின் அழைப்பில் யோசனையில் இருந்து விடுப்பட்ட சரண்யா, தன்னை சமாளித்துக் கொண்டு,
“என்ன உமா?” என்றாள்.
“ஒரு மணி ஆச்சு மேடம். நீங்க வீக்லி மீட்டிங்குக்கு வரலையா?”
கம்பெனியின் நிகழ்வுகளை பற்றி திட்டமிட ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேர மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான் மித்ரன்.
உமா சொன்ன பின் தான் அது சரண்யாவிற்கு நினைவே வந்தது!
“வரேன்ப்பா,” என்றபடி அவசரமாக எழுந்தாள்.
மித்ரனுக்கு லேட்டாக வருவது பிடிக்காது. ஒரு சில வினாடிகள் தாமதமாக வந்தாலும் யார் என்ன என்று பார்க்காமல் காய்ச்சு எடுத்து விடுவான்.
அதிலும் சரண்யா என்றால் சொல்லவே வேண்டாம்!!!!
அவசர அவசரமாக நடந்து மித்ரனின் அறைக் கதவை தட்டி விட்டு இருவரும் உள்ளே சென்றார்கள்.