✽✽✽
சற்று தூரத்தில் இருந்த வாட்டர் கூலர் சத்யாவின் கண்ணில் பட்டது...
அன்று சங்கீதா வாட்டர் கூலர் பக்கத்தில் தேன்மொழியின் அறை இருப்பதாக சொன்னது நினைவுக்கு வரவும், அதை நோக்கி நடந்தான்...
வாட்டர் கூலரின் பக்கம் சென்றவனின் காதுகளில், பக்கத்தில் இருந்த தேன்மொழியின் அறையில் இருந்து வந்த பேச்சு விழுந்தது.
"தேன்மொழி, லஞ்ச் முடிச்சிட்டு வந்து வேலை செய்..."
"இல்லை கண்மணி, உனக்கும் தெரியும் தானே? நிறைய வேலை இருக்கு. நான் இன்னைக்கு ஈவ்னிங்கே எல்லா வேலையும் முடிச்சாகனும்!"
"ஒரு அரை மணி நேரம் தானே தேன்மொழி?"
"இல்லைப்பா, எனக்கு தலை வலிக்குற மாதிரி இருக்கு... நீ சாப்டுட்டு வரும் போது அப்படியே எனக்கு ஒரு காஃபி மட்டும் வாங்கிட்டு வா..."
கண்மணி அந்த அறையை விட்டு வெளியே செல்வதை பார்த்த சத்யா, இப்போது தேன்மொழியிடம் சென்றுப் பேசலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே, கண்மணி திரும்பி வந்தாள்!
அவள் கைகளில் காஃபி இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.
"சாரி தேன்மொழி, காஃபிக்கு பால் இல்லையாம்..."