(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”ம்மா” என முனகியபடியே எழுந்தாள், கட்டிலில் படுத்திருந்தாள். கையில் தாலி இருந்தது. சுற்றிலும் யாருமில்லை, அதைக் கண்டு திகைத்தாள். சட்டென கட்டிலைவிட்டு எழுந்து இறங்கி சுற்றி முற்றி பார்த்துவிட்டு அறைக்கு வெளியே வந்தாள்.

   

”யாரு நம்மளை படுக்கையில படுக்க வைச்சது, யாரா இருக்கும் ஒருவேளை தில்லையோ, எவ்ளோ தைரியம் அவனுக்கு என்னை தொடறானா வேற ஏதாவது செஞ்சிட்டானா” என தன்னையே ஏற இறங்கப் பார்த்தாள் கட்டிய புடவை கசங்கவில்லை, அவளும்தான் அதை வைத்து புரிந்துக் கொண்டவள் நிம்மதியானாள். ஆனாலும் தன்னை எப்படி அவன் தொடலாம் என்ற கோபத்தில் அவனைத் தேடினாள்

   

”தில்லை டேய் தில்லை எங்கடா இருக்க” என கோபமாக அழைத்தபடியே வந்தவளுக்கு ஹாலில் ஒரு டேபிளின் மீது டிபன் பார்சல் இருந்தது, அவளுக்காக டிபன் வைத்திருந்தான் தில்லை, வாசற்கதவு மூடியிருக்கவும் அங்கு சென்று திறக்க முயன்றாள், கதவு வெளிப்புறம் தாள்பாள் போட்டிருக்கவே அதிர்ந்து 

   

”யாராவது இருக்கீங்களா கதவைத் திறங்க கதவை திறங்க” என தட்டோ தட்டென்று தட்டி கூப்பாடு போட சில நொடிகளில் கதவின் தாள்பாள் திறக்கும் சத்தம் கேட்கவும் அவசரமாக அவள் பின்னால் சென்றாள். 

   

புயல் போல உள்ளே நுழைந்தான் தில்லை. ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட், தலைமுடியை போனிடெயில் போட்டுக் கொண்டு தொப்பி அணிந்திருந்தான், கூலிங் க்ளாஸ் வேறு இந்த வேஷத்தில் யாராலயும் அவனை தாதா என நம்ப மாட்டார்கள் அப்படி இருந்தான்.

   

”எதுக்கு கத்தற, அக்கம் பக்கம் வீடுகள் இருக்குல்ல என்ன நினைப்பாங்க என்னைப் பத்தி”

   

”உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னை படுக்கையில படுக்க வைச்சிருப்ப”

   

”என்ன பெரிசா ஒரு 50 கிலோ இருப்பியா நீ, தூக்கினா உடனே வந்துட்ட அய்யோ பாவம் தரையில படுத்து தூங்கறியேன்னு இரக்கப்பட்டு உன்னை படுக்கையில படுக்க வைச்சிட்டு நைட்ல இருந்து காலை வரைக்கும் நான் தரையில் படுத்து தூங்கினேன் தெரியுமா, நோகாம 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.