பெட்ல படுத்து தூங்கிட்டு பேச்சைப்பாரு” என திட்ட அவளோ
”நான் எப்படி போனா உனக்கென்ன“
”அதைத்தான் நானும் சொல்றேன் நீ எப்படி போனா எனக்கென்ன போய் தொலையேன், எனக்கு நிம்மதியா இருக்கும்” என சொல்லியபடியே வெளிய செல்ல முயன்றவனை முறைத்துவிட்டு
“எங்க போற என்னை விட்டுட்டு” என்றாள் அதிகாரமாக
”அதுக்குன்னு எல்லா இடத்துக்கும் உன்னை கூட்டிட்டுப் போக முடியுமா என்ன, நான்தான் நேத்தே சொன்னேனே ஒரு முக்கியமான வேலையா வேற ஊருக்குப் போறேன்னு மறந்துட்டியா”
”எனக்கு நியாயம் வழங்காம உன்னால எங்கயும் போக முடியாது, போகவும் விடமாட்டேன்” என்றாள் உறுதியாக
அதைக் கேட்டு அவன் அமைதியாக சோபாவில் சென்று அமர்ந்துக் கொள்ள அவளோ அவன் முன் நின்றாள். அவளின் முகம் வாடி போய் இருந்தது அதைக் கண்டு
”நான் எங்கயும் போகலை முதல்ல சாப்பிடு, பாரு உன் முகம் எப்படியிருக்குன்னு விட்டா நீ மயங்கிடுவ போல இருக்க இந்தா சாப்பிடு“ என சொல்லி அங்கிருந்த பார்சலை அவளிடம் நீட்ட அவளோ
”விசத்தை கலந்த சாப்பாடு எனக்கு வேணாம்” என பட்டென சொல்ல அவனோ அமைதியாக அந்த பார்சலை விசிறியடித்தான். அது தரையில் விழுந்து உள்ளிருந்தவையெல்லாம் தரையில் சிதறியது
”யாராவது சாப்பாட்டை இப்படி எறிவாங்களா” என சம்யுக்தா திட்ட அவனோ
“அதுலதான் விசம் இருக்குன்னு நம்பறியே, வேற என்ன செய்றது அதை, சொல்லு பார்க்கலாம் எனக்குன்னு வந்து சேர்ந்தியே, உன்னை என்ன சொல்றதுன்னு தெரியலை போனா