Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 03 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அக்ஷரா, ஆகாஷிடம் ஏதேதோ கதை பேசிக் கொண்டு வர, சுபாஷினியும், ஜோதியும் தங்களின் மனதில் தோன்றிய ஆசையை காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல தங்களுக்குள் கதைகள் பேசிக் கொண்டு வந்தார்கள்.
ஆகாஷ் சொன்னது போலவே வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது அவர்கள் இருவருக்குமே புத்துணர்ச்சியாக தான் இருந்தது.
“என் பொண்ணுக்கு தோணாதது கூட உனக்கு தோணி இருக்கே. தாங்க்ஸ் ஆகாஷ்,” என்றாள் ஜோதி.
“என்ன ஆன்ட்டி எனக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? நான் எப்போவே உங்க வீட்டு பையன் தான்,” என்றான் ஆகாஷ்!
இதை எப்படி எடுத்துக் கொள்வது என மனதில் எழுந்த கேள்வியுடனே, கணவன் மற்றும் மகளுடன் தோழிக்கு மீண்டும் வாழ்த்து சொல்லி விட்டு விடைப் பெற்றாள் ஜோதி.
✽✽✽
“உங்க அம்மா இப்படி தலைகுனிஞ்சு நின்னு பார்த்திருக்கீயா ஆகாஷ்? எனக்கு தெரிஞ்சு இந்த ஒரே ஒரு நாள் தான் அப்படி ஒன்னு நடந்திச்சு...”
பிரகாஷ், சுபாஷினி, ஆகாஷ் மூவரும் அமர்ந்து பிரகாஷ் சுபாஷினி திருமண வீடியோவை ஹோம் தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அம்மா அப்பாவின் திருமண நாள் அன்று இப்படி அவர்களின் பழைய வீடியோக்களில் இருந்து ஏதாவது ஒன்றை போட்டு பார்ப்பது அவ்வப்போது நடப்பது தான்... இது ஆகாஷிற்கு மிகவும் பிடித்த ஒரு விஷயமும் கூட...
இப்படி வீடியோ பார்க்கும் போதெல்லாம், பிரகாஷ் மனைவியை கிண்டல் செய்துக் கொண்டே இருப்பார்... சில சமயங்கள் முறைத்தாலும், கோபப்பட்டாலும் வாயை திறந்து பதில் ஒன்றும்