(Reading time: 5 - 10 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 17 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

கமலை அப்படி பார்க்க சுமித்ராவிற்கு என்னவோ போல இருந்தது.

   

“என்னங்க...???” மெல்ல அவனை அழைத்தாள்.

   

சுமித்ராவின் குரல் கேட்டாலே துள்ளிக் குதிப்பவன், இன்று அது காதில் விழாதவனைப் போல அசையாமலே அமர்ந்திருந்தான்.

   

கையில் இருந்த தட்டை மேஜை மீது வைத்து விட்டு, கணவனுக்கு அருகே சென்று உரசியபடி அமர்ந்த சுமித்ரா, “கமல்,” என்று அவனின் காதோரமாக கத்தினாள்.

   

திடுக்கிட்டு திரும்பிய கமல், சுமித்ராவை பார்த்தது பார்த்தபடி அசையாமல் இருந்தான்.

   

எப்போதும் போல பொய் கோபம் காட்டுவான் என்று எதிர்பார்த்திருந்த சுமித்ராவிற்கு ஏமாற்றமாக இருந்தது.

   

அவளையே பார்த்துக் கொண்டிருந்த கமலின் கண்களிலும் என்னவோ வேறுபாடு இருப்பதாக தோன்றியது...

   

“ஆஃபிஸ்ல ஏதாவது பிரச்சனையாங்க???” அவனின் கேசத்தை கைகளால் அலைந்தப் படி கேட்டாள்...

   

அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்தவன், திடீரென, “சுமி...” என்றான்...

   

அவள் என்ன என்று கேட்கும் முன்பே அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

   

அவன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்பது புரிய, அவனை விலக்காமல் ஒண்டியபடி, “என்னப்பா என்ன நடந்துச்சு...?” என்று மீண்டும் கேட்டாள் சுமித்ரா.

   

கட்டிப் பிடித்ததை போலவே திடீரென அவளை விடுதலை செய்து நேராக அமர்ந்தவன், “ஒன்னும் நடக்கலை சுமி,” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.