(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 10 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

சரண்யாவும், மைத்ரேயியும் சென்ற வழியில் ஆஃபிஸ் பகுதி இருந்தது... அங்கே மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் மைத்ரேயியை கவனித்து புன்னகைத்தார்கள்... அவள் அருகே இருந்த சரண்யாவை யோசனையுடன் பார்த்தார்கள்.

   

ஒரு க்யூபின் அருகே நின்ற மைத்ரேயி, “வெண்ணிலா, இரண்டு ஃப்ரெஷ் லெமன் ஜூஸ் என் ரூமுக்கு அனுப்பி வைக்குறீயா?” என்றாள்.

   

வெண்ணிலா பதில் சொல்லிக் கொண்டிருக்க, சரண்யா மைத்ரேயியை விழிகளால் அளந்தாள்.

   

அவளின் வயது பின் இருபதுகளிலோ, முன் முப்பதுகளிலோ இருக்கலாம்...

   

மிகவும் எளிமையானவளாக தெரிந்தாள்... கழுத்தில் மெல்லிய தாலி சரடு... காதில் சின்னதாக ஒரு கம்மல்... கைகளில் இரண்டு வளையல்கள்...

   

சராசரி பெண்ணை விட சற்றே குள்ளமாக இருந்தாலும், மெலிந்த உடல் வாகும், நேர்த்தியாக கட்டி இருந்த சேலையும், அவளை அழகானவளாக எடுத்துக் காட்டின...

   

அதுவும் அவள் பேசும் போது அவளுடனே கூட பிறந்தது போல வந்த அந்த பளிச் பளிச் புன்னகை அவளின் அழகுக்கு அழகூட்டியது...

   

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மை தான் போலும்....

   

இந்த எண்ணம் தோன்றிய உடனேயே, தானாக மித்ரனின் முகம் சரண்யாவின் கண் முன் தோன்றியது!

   

“ஹலோ, அப்படி யாரை பத்தி நினைக்குறீங்க, உங்க முகம் இப்படி போகுது???”

   

மைத்ரேயியின் கேள்வியில் சிந்தனையில் இருந்து விடுப் பட்ட சரண்யா,

   

“அப்படி எல்லாம் இல்லை மேடம்,” என்றாள் அவசரமாக.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.