Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 24 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தில்லையும் சம்யுக்தாவிடம் வந்து அவளை பிடித்துக் கொண்டான்
”வா போலாம் வீடு வந்துடுச்சி” என சொல்ல
”நானே நடப்பேன்” என்றாள். சரியென விலகி நின்றான். 5 அடி கூட நடந்திருக்க மாட்டாள் உடனே அவளுக்கு தலை சுற்றி மயக்கம் வரவும் உடனே அவளை தாங்கிக் கொண்டான். அவளை தூக்கிக் கொண்டு 5 மாடி ஏறி தனது வீட்டிற்குச் சென்றான். சித்தனும் கதவை திறந்துவிட தில்லையோ சித்தனிடம்
”உன் அம்மாவை கூட்டிட்டு வா”
“எதுக்கு“
”இவளை பார்த்துக்கச் சொல்லு“
”சரிண்ணா இப்பவே அனுப்பறேன்“
”அப்புறம் சாப்பாடு வேணும், பசிக்குதுன்னு அப்பவே சொன்னாள்”
”அப்படியா சரிண்ணா நான் பார்த்துக்கறேன், அப்புறம் உனக்கு அடிபட்டிருக்கே”
”இதை நான் பார்த்துக்கறேன், முதல்ல இவளை காப்பாத்தனும்”
”சரிண்ணா இப்பவே வரேன்” என சொல்லியவன் அவனது தாயை அழைத்து வர 2-வது தளத்திற்குச் சென்றான்.
தில்லையோ சம்யுக்தாவை அழைத்துச் சென்று உள் அறையில் இருந்த படுக்கையில் படுக்க வைத்தான்.
அவளும் மயக்கத்தில் இருக்கவே அங்கிருந்த நீர் கொண்டு அவள் முகத்தில் தெளிக்க அதில்