(Reading time: 10 - 19 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

அவள் தலையை அசைத்தாள்

   

”சம்யுக்தா சம்யுக்தா கண்ணை திறந்து பாரு, இங்க பாரு என்னைப் பாரு” என தில்லை அவளிடம் பேச அவளும் மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தாள்

   

”எனக்கு நியாயம் கொடு” என முனக அவனோ சிரித்தான்

   

”தரேன்” என்றான் அதற்குள் ஒரு பெண்மணி வரவே அவரிடம்

   

”அம்மா இவளை பார்த்துக்குங்க, சாப்பிட வைங்க, குளிக்க வைங்க, துணியை மாத்தி வேற துணியை கொடுங்க, நான் அப்புறமா வரேன்” என சொல்ல சம்யுக்தா உடனே அவனது கையை பிடித்தாள்

   

”என்னை விட்டு போகாத” என்றாள் அவனோ

   

”நான் எங்கயும் போகலை, இங்கதான் இருக்கேன் நீ எழுந்து குளிச்சிட்டு சாப்பிடு, இவங்க சித்தனோட அம்மா, உனக்கு உதவ வந்திருக்காங்க எழுந்து உட்காரு” என சொல்ல அவளோ கஷ்டப்பட்டு எழுந்து அமர அவளை அந்த அம்மாவிடம் விட்டுவிட்டு வெளியேறினான்.

   

அவனுக்கும் காயங்கள் பட்டிருந்தது, அதற்கு சித்தன் மருந்து கொடுத்தான். கூடவே சாப்பாடும் கொடுக்க தில்லையும் சாப்பிட்டு முடித்தான்.

   

சம்யுக்தாவும் உள் அறையில் இருந்த பாத்ரூமில் குளித்து முடித்து தான் அணிந்திருந்த பட்டுப் புடவையை அவிழ்த்துவிட்டு தில்லையின் தாயார் புடவையை அணிந்துக் கொண்டாள். அவள் அணிந்திருந்த நகைகளை மூட்டையாக கட்டி அதே அறையில் ஓரிடத்தில் பத்திரமாக பதுக்கி வைத்தாள். அதற்குள் சித்தனின் தாயார் சாப்பாடு கொண்டு வரவே அதை சாப்பிட்டு முடித்தாள். இப்போது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. சிறிது நேரம் ஓய்வெடுக்க நினைத்தாள். அதனால் அவளை விட்டுவிட்டு சித்தனின் தாயும் அங்கிருந்து வெளியேறினார்.

   

இனி அந்த வீட்டில் தில்லையும் சம்யுக்தாவும்தான் இருந்தார்கள். மாலை நேரமாகியிருந்தது. சம்யுக்தாவே தில்லையை காண வந்தாள். அவனோ காயப்பட்ட இடத்தில் கட்டுப் போட்டுக் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.