”இல்லை உங்க உடம்புல நிறைய தழும்புகள் இருக்கே, எப்படி இது வந்துச்சி”
”இதெல்லாம் வீர தழும்புகள்” என சொல்ல அவளோ கோபம் கொண்டாள்
”இதப்பாருங்க, அமைதியா இருக்கேன்னு இப்படி வசனம் பேசினீங்க, நானே உங்களை கொன்னுடுவேன், செய்றது தப்பான காரியம், நிறைய கெட்டவங்களோட சண்டை போட வேண்டியது அதுல காயம் பட்டா அதை வீர தழும்புகள்ன்னு பெருமையா சொல்லிக்க வேண்டியது இது உங்களுக்கே ஓவரா இல்லை” என திட்ட அவனோ
”என்னைப் பத்தி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்க”
”நீயா நீ ஒரு தாதா, கெட்டவன், மோசமானவன், அயோக்கியன், சுயநலவாதி” என மறுபடியும் அவள் வரிசையாக அவனை திட்ட ஆரம்பிக்கவும் அவனுக்கு ஆயாசமே வந்தது. அவளை அடக்கவோ விரட்டவோ முடியாமல் தவித்தான். மேற்கொண்டு என்ன செய்வது என யோசித்தவன் அவளை வெளிய விரட்ட முடிவெடுத்து அவளின் கரத்தைப் பற்றினான். அவளோ ஆஆஆவென அலறினாள் அதோடு தில்லையோ எழுந்து நின்றான் உடனே சம்யுக்தாவோ
”ஏய் பைத்தியமா நீ ஏன் இப்படி செய்ற”
”நான் என்ன செஞ்சேன்“
”தனியா இந்த நேரத்தில எதுக்காக என் கையை பிடிச்சி இழுக்கற இது தப்பு” என சொல்லிய பின்புதான் தில்லைக்கே புரிந்தது.
”ஓ ஆமாம் ஆமாம் அது அப்படித்தான் ஏன்னா இது என் வீடு, இன்னொரு முறை என் முன்னாடி வந்து நின்ன, இப்படிதான் கையை பிடிச்சி இழுப்பேன், இழுக்கறது என்ன தனியா வேற இருக்க, இங்க யாருமே இல்லை, எனக்கு உன் மேல இருக்கற கோபத்துக்கு உன்னை” என அவன் முடிக்கும் முன்பே புரிந்துக் கொண்டவள் பயத்துடன் அவன் முன்பு