”நியாயம் கேட்டு வந்த பொண்ணை பலாத்காரம் பண்றது தப்பு” என்றாள் அமைதியாக அதைக் கேட்டவன்
”நானே கெட்டவன் தப்பானவன்னு நீயே சொல்ற, அப்ப நான் தப்பு செஞ்சா என்னாயிடும் சொல்லு வா என்கிட்ட வா வா” என அன்பாக அழைக்க அவளோ விலகிச் சென்றாள்.
அவளின் விலகலை தனது வெற்றியாக நினைத்தவன் அவளை முழுதாக விரட்ட ஒரு வழி கண்டறிந்தான். அவளே விலகி நின்றாள் வேண்டுமென்றே அவளைப் பார்த்து மென்மையாக சிரித்து வைத்தான். அவனது சிரிப்பைக் கண்டு
”எதுக்கு இப்படி சிரிக்கற” என பயந்தபடியே கேட்க அவனோ
”என் வாழ்க்கையில நான் நிறைய நாள் கஷ்டப்பட்டிருக்கேன், சந்தோஷமான தருணங்களே எனக்கு இல்லை, அது என்னவோ தெரியலை உன்னைப் பார்த்தாலே எனக்கு சந்தோஷமா இருக்கு, நீ அழகாயிருக்கறதால அப்படி சொல்லலை, என்கிட்டயே இருக்கியா நான் எங்க போனாலும் வர்றியா அதுல உன் மேல எனக்கு ஒரு இனம் புரியாத உணர்வு வருது, அது என்னன்னா” என சொல்லிக் கொண்டே அவளிடம் மெதுவாகச் செல்ல அவளோ
”வேணாம் வராத” என அலற
”இரு நான் சொல்றதைக் கேளு”
”இல்லை நீ அங்க நின்னே சொல்லு என்னைத் தொடாத”
”ப்ச் நீ மட்டும் எத்தனை முறை என் கையை பிடிச்சிருக்க, என்னை கட்டிபிடிச்சிருக்க, நான் ஏதாவது சொன்னேனா இல்லை கோபப்பட்டேனா, ஒரு முறை உன்னை பிடிச்சதுக்கே இப்படி கத்தற“
”நீ என்னை ஏமாத்திட்டுப் போயிடுவன்னு நினைச்சிதான் உன் கையை பிடிச்சேன், உன் மேல எனக்கொன்னும் ஆசையில்லை, எனக்கு உன்னை பிடிக்காது எப்பவுமே பிடிக்காது”