(Reading time: 10 - 19 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

கொண்டு அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தான். அவனது நிலைமையை கண்டும் அவள் மனம் இரக்கப்படவில்லை, நேராக அவனின் முன் நின்றாள். அவனும் அவளைப் பார்த்தான். அவனது தாயார் புடவையில் இருந்தாள், நகைகள் இல்லாமல் எளிமையாக இருந்தாள், பார்க்கவே அழகாக இருந்தாள். அதனால் அவன் அவளை கண்டு புன்னகைக்க அவளோ

   

”சிரிக்காத அதான் கருணாவை பிடிச்சிட்டல்ல, இப்ப எனக்குண்டான நியாயத்தைச் சொல்லு” என ஆரம்பித்தாள் கையில் அவள் வைத்திருந்த தாலியை வேறு அவனின் முன்பு நீட்டி கேட்க அவனோ அலுத்துக் கொண்டான்

   

”காலையில இருந்து ஓடி ஓடி உடம்பு வலிக்குது, இங்க பாரு எனக்கு காயம் பட்டிருக்கு, தூக்கம் வேற வருது, நான் போய் தூங்கறேன், உனக்கான நியாயம்தானே நாளைக்கு காலையில தரேன் இப்ப என்னை விடு ப்ளீஸ்” என கெஞ்சியபடியே எழுந்து நின்று அவளைப் பார்க்க அவளோ விடாமல் ஒரு அடி முன்னாடி வந்து நின்றாள், அவனோ அவளை அசால்டாக தள்ளிவிட்டு உள் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்தான். அவளோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்

   

”அப்படி பார்க்காத நான் உனக்கு காலையில நியாயம் சொல்றேனே, இப்ப என்னை விட்டுடு ப்ளீஸ்” என கெஞ்ச அவளோ முடியாது என தலையை ஆட்டினாள்

   

”எத்தனை நாள்தான் இங்கயே நான் இருக்கறது, நான் எங்கப்பாவை போய் பார்க்கனும், நீ என்கூட வா வந்து எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேளு“

   

“என்னால இங்கிருந்து வரமுடியாது, கருணாவை பிடிச்சதால மிச்ச எதிரிங்க உஷாராயிருப்பானுங்க, அவனுங்களும் எனக்கு ஸ்கெட்ச் போட்டு வைச்சிருப்பானுங்க, நான் அவங்களை பிடிக்கறதுக்குள்ள அவனுங்க என்னை கொல்லனும்னு நினைப்பாங்க, என்னால வெளிய வரமுடியாது, அப்படியே நான் வந்தாலும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்”

   

”அப்ப நானும் உன்னை விட்டு போக மாட்டேன்” என சொல்லி படுக்கையின் ஒரு ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு அவனையே பார்த்தாள். அவனோ மெல்ல எழுந்து அமர்ந்து அவளையே பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.