(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத்

   

This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.

  

ஆண்டு – 2019.

   

இடம் - சேனைத் தீவு *

   

பிரமாண்டமான அந்த அறைக்குள் நுழைந்தார் ரோஷன். அங்கே இருந்த இளவரசி ரோஹினியை பார்த்ததும் அவரின் மனதில் எப்போதும் போலவே அமைதி நிறைந்தது. ஆனால் தன்னுடைய சொந்த பேத்தியைப் போல அவர் தூக்கி வளர்த்த இளவரசியின் முகத்தில் இருந்த வருத்தம் அவரின் மனதையும் வருத்தியது.

   

ரோஷன் பக்கத்தில் வந்ததும் மரியாதையுடன் அவரின் காலில் விழுந்து வணங்கினாள் ரோகினி.

   

“நமச்சிவாய! நமச்சிவாய! நான் வணங்கும் அந்த ஈஸ்வரன் உங்களுக்கு சக்தியையும், ஞானத்தையும் கொடுக்கட்டும்,” என ரோஹினியை, மனமார வாழ்த்தினார் ரோஷன்.

   

நிமிர்த்து நேரே நின்ற ரோஹினி, கண்களை எட்டாத புன்னகையுடன், “வணக்கம் தாத்தா!” என்றாள்.

   

ரோஷன் இளவரசியிடம் என்ன பேசுவது, எப்படி தேற்றுவது, என்ன எல்லாம் சொல்லி மனதை மாற்றுவது என யோசித்தார்!

      

அவர்களின் சொந்த நாடான சேனைத் தீவு* பசிபிக் பெருங்கடலின் நடுவே இருக்கும் ஒரு சிறிய தீவு.

   

சர்வதேச அளவில் புகழ்ப்பெற்ற சுற்றுலா தளமாகவும், கடல் தொடர்பான உணவுகளுக்கு பிரபலமானதாகவும் இருக்கும் தீவு அது.

   

அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்தாலும் இருபத்தி ஓராம் நூற்றாண்டான இந்த காலத்திலும் அமைதியான மன்னராட்சியே அங்கே நடந்து வந்தது.

   

* - கற்பனைத் தீவு

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.