பல நூற்றாண்டுகளுக்கு முன் சோழர்களுடன் வர்த்தக ரீதியாக நெருக்கமான உறவு கொண்டிருந்ததால் இப்போதும் தமிழை முக்கிய மொழியாக பேசும் தீவாக இருந்தது.
சேனைத்தீவின் மன்னராக இருந்த ரோஹினியின் அப்பா ரஞ்சன் பத்து வருடங்களுக்கு முன் இறந்த பிறகு அவரின் மனைவி ராணி ரேவதியே ராஜாங்க விஷயங்களை கவனித்து வந்தார்.
எதிர்பாராத விதமாக திடீரென மாரடைப்பில் ரேவதி இறந்து விட, ரோஹினி தாயையும், சேனைத்தீவு ராணியையும் இழந்து நின்றது!
இருபத்தி ஐந்து வயதில் பெற்றோரை இழந்து நிற்கும் ரோஹினியின் நிலையை எண்ணி ஆதங்கப் பட்டார் ரோஷன்.
ஆனால் இப்போது அவளுக்காக வருத்தப் பட்டுக் கொண்டு நிற்கும் நேரமில்லை என்பதை உணர்ந்தவராக,
“இளவரசி, உங்களுக்கு தெரியாதது இல்லை. உங்க அம்மா ராணி ரேவதி இறந்ததினால் நம்ம தீவு ராஜா, ராணி இல்லாமல் அனாதையாக இருக்கு. இந்த நேரத்தில் இளவரசியான நீங்க தான் ராணியாக மூடி சூடனும். ஆனால் உங்களுக்கு ராஜாங்க விஷயங்களில் அனுபவம் இல்லை. அதனால நீங்க நம்ம தளபதி விக்கிரமாதித்தனை கல்யாணம் செய்துக்கிட்டா உங்களுக்கும் நல்லது, நம்ம தீவுக்கும் நல்லது” என்றார் திடமான குரலில்.
ரோஹினியின் முகத்தில் கோபம் எட்டிப் பார்த்தது.
“என்ன தாத்தா பேசுறீங்க? நாம என்ன பதினெட்டாவது நூற்றாண்டிலா இருக்கோம். 2019ஆம் வருஷத்தில வந்து இப்படி சொல்றீங்க? என் கல்யாணம் என் விருப்பம் போல தான் நடக்கும்!”
ரோஹினியின் குரலில் இருந்த திடமும், கம்பீரமும் அந்த நேரத்திலும் ரோஷனுக்கு ரசிக்க கூடியதாக தான் இருந்தது! அவளை நினைத்து மனதுக்குள் பெருமை பட்டவர், வெளியே அதைக் காட்டிக் கொல்லாமல்,