(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

விக்ரமின் குணத்தை பற்றியும் அவள் இதுவரை தவறாக எதுவும் கேள்வி பட்டதில்லை.

   

ரோஷன் சொல்வதுப் போல சேனை தீவுக்காக உயிரை கொடுக்கவும் தயங்க மாட்டான் விக்ரம்!

   

இது எல்லாமே அவளுக்கும் தெரியும்... ஆனால் அவளை பொறுத்த வரையில் திருமணம் என்பது வேறு விஷயம்!

   

அது என்னவோ, அவளால் விக்ரமை அவளுடைய கணவனாக நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை!!!

   

ரோஹினி மனதில் அலைமோதிய எண்ணங்களுடன் நிற்க... ரோஹினியும், ரோஷனும் தன்னைப் பார்த்து விட்டதை உணர்ந்தவனாக, விக்ரம் நடந்து அவர்களின் முன்னே வந்து நின்றான்.

   

“உங்க பேச்சில் குறுக்கிட்டதுக்கு மன்னியுங்கள் இளவரசி, திவான்!”

   

“பரவாயில்லை விக்ரம். நாங்க பேசிட்டு இருந்தது உன் சம்பத்தப் பட்ட விஷயம் தானே,” என்று விக்ரமிடம் சொன்ன ரோஷன், ரோஹினியிடம்,

   

“இன்னும் இரண்டு நாள்ல நல்ல முகூர்த்தம் இருக்கு இளவரசி. அன்னைக்கு உங்க திருமண அறிவிப்பை சொல்லி நிச்சயதார்த்தம் முடிச்சிடலாம். உங்க அம்மாவின் இழப்பில் இருந்து நீங்க வெளி வந்த பிறகு... ஒரு மூன்று நாலு மாசத்துக்கு அப்புறம் கல்யாணத்தை வச்சுக்கலாம். இந்த தீவு மக்களுக்காக நீங்க இதை செய்யனும்,” என்றார் குழந்தையிடம் சொல்வது போல!

   

“ஆமாம், செய்து தான் ஆகனும்,” என்றான் விக்ரம் கண்டிப்பான குரலில்.

   

அவன் அதை சொன்ன தோரணை ரோஹினியின் கோபத்தை அதிகப் படுத்தியது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.