(Reading time: 10 - 19 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”நான் சொல்ற பேச்சையே கேட்க மாட்டியா, நீ சொல்ற மாதிரி என்னால நியாயம் வழங்க முடியாது புரிஞ்சிக்க” என சொல்ல அவளோ அமைதியாக இருந்தாள்.

   

அவனோ அவளையே ஏற இறங்கப் பார்த்தான்

   

”இது என் அம்மாவோட புடவை, நிறைய முறை இந்த புடவையை அவங்கதான் கட்டிக்குவாங்க, உனக்கு இது ரொம்ப நல்லாயிருக்கு”

   

”இப்படி ஐஸ் வைச்சாலும் நான் கரைய மாட்டேன், நான் உறுதியா இருக்கேன்” என சம்யுக்தா சொல்ல அவனோ நொந்துப் போய் படுத்து உறங்க ஆரம்பித்தான்.

   

இரவு நேரமே வந்தது, சித்தனும் இரவு நேர சாப்பாட்டை கொண்டு வந்து தர அதை சம்யுக்தா வாங்கி சாப்பிட்டு முடித்தாள். தில்லையோ இன்னும் உறங்குவதால் அவனுக்கான சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவனிடமே சென்று அவனை எழுப்பினாள், அவனோ மெல்ல கண்கள் திறந்தான்

   

”எழுந்திரு” என்றாள் அதிகாரமாக

   

”ஏன்” என கேட்டான் தில்லை

   

”நான் எங்க தூங்கறது, எழுந்திரு, என்னால தரையில படுத்துக்க முடியாது, இந்தா சாப்பாடு சாப்பிடு எழுந்து போ” என கத்த அவனோ எழுந்து அமர்ந்தான், அவனிடம் சாப்பாடு தட்டை தர அதை வாங்கியவன் எழுந்து நின்றான், உடனே அவள் அந்த படுக்கையில் படுக்கச் செல்ல அவனோ தடுத்தான்

   

”முடியாது நான் விடமாட்டேன், நான் இங்கதான் படுப்பேன், எனக்கே உடம்பெல்லாம் வலிக்குது, அடிபட்டிருக்கு, தரையில என்னால படுக்க முடியாது நீ போய் சோபாவில படு”

   

”முடியாது நான் இங்கதான் படுப்பேன்” என சொல்லிவிட்டு அவள் படுத்துக் கொள்ள அவனோ 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.