வெளியே சென்று சாப்பாடு சாப்பிட்டு மீண்டும் உள்ளே வந்தான். அவளோ உறங்காமல் அவனையே பார்த்தாள்.
தான் அணிந்திருந்த சட்டையை அவிழ்க்க அவளோ அலறினாள்
”ஏய் ஒரு பொண்ணு முன்னாடி ட்ரஸ் மாத்தறது தப்பு உனக்கு மேனர்ஸே இல்லையா” என திட்ட அவனோ பாதி அவிழ்ந்த சட்டையை முழுவதுமாக அவிழ்த்து கோபத்தில் தூக்கி எறிந்தவன் அவசரமாக அவளிடம் வந்தான். அவனின் வேகத்தைக் கண்டு சம்யுக்தா எழுந்து அமர்ந்துக் கொண்டாள்
”இது என் வீடு, என் ரூமுல நான் எப்படி வேணும்னாலும் இருப்பேன், அதை கேட்க நீ யாரு, போனா போகட்டும்னு பொறுமையா இருந்தா ரொம்பதான் துள்ளற, எழு கட்டிலை விட்டு எழு, உனக்கு நியாயம்தானே வேணும் காலையில வந்து என்னைப் பாரு இப்ப கிளம்பு”
”கிளம்புன்னா எங்க போறது”
”எங்கயாவது போ, எனக்கு கவலையில்லை“ என சொல்லியதோடு அவளை எழுப்பிவிட அவளோ தடுமாறி அவன் மீதே விழுந்தாள். அதில் அவனுக்கு காயம்பட்ட இடம் வலிக்கவே
”ஆஆஆ வலிக்குது அடிப்பாவி ஆஆ” என கத்த அவளோ
”ஓ சாரி சாரி” என்றாள்
அவளை விலக்கிவிட்டு படுக்கையில் அமர்ந்தான். அவளோ அவனையே பார்த்தாள். புதிதாக ஏற்பட்ட காயம் மட்டுமில்லாமல் ஏற்கனவே நிறைய காயங்கள் ஏற்பட்டு அவனது உடலில் ஆங்காங்கு தழும்புகளும் வடுக்களும் இருந்தது. அதையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா, அவள் செல்லவில்லையே ஏன் என தெரிந்துக் கொள்ள தில்லையும் அவளைப் பார்த்தான், அவள் தன்னை ஆராய்வதைக் கண்டு கூச்சத்துடன்
”ஏன் அப்படி பார்க்கற”