“ஓகே, கூல்,” என்ற மைத்ரேயி, ஒரு தோழியை அழைத்து செல்வது போல, சரண்யாவின் கையை பிடித்துக் கொண்டு தன் அறைக்கு அழைத்து சென்றாள்.
“உட்காருங்க,” என அவள் சொல்லும் போதே ஜூஸ் வந்து சேர்ந்தது.
“எடுத்துக்கோங்க சரண்யா,” என்ற மைத்ரேயியின் வார்த்தைகளுக்கு மறுப்பு சொல்லாமல் ஜூஸை கையில் வாங்கிக் கொண்டாள் சரண்யா.
“குடிங்க...”
“மேடம், நான்...”
“ஜூஸ் குடிச்சிட்டே பேசலாம்... சொல்லுங்க... உங்களுக்கு எத்தனை பசங்க...”
“ஒரு பொண்ணு மேடம்... எல்.கே.ஜி படிக்குறா...”
“ஓ! சாரி... நினைச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு... எனக்கு கோபி இறந்து ஆல்மோஸ்ட் ஒன் இயர் கழிச்சு தான் விஷயம் தெரியும்... சேகர் சொன்னார்... சச் அ நைஸ் மேன்... இப்படின்னு நம்பவே முடியலை... சாரி சரண்யா...”
சரண்யாவின் கண்களில் அவளின் மனக் கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் எட்டிப் பார்த்தது...
அதை கவனித்த மைத்ரேயி, அவளின் அருகே இருந்த டிஷ்யூ பேப்பர் டப்பாவை சரண்யா பக்கம் தள்ளி வைத்தாள்.
குறிப்புணர்ந்து, சமாளித்துக் கொண்டு, டிஷ்யூவை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டாள் சரண்யா.
“வேலை கேட்டு வந்திருக்கீங்கன்னு சொன்னாங்க... ஏன் அப்படி? கம்பெனி என்ன ஆச்சு?