(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா???”

   

“இல்ல மேடம்... “ என்று தொடங்கிய சரண்யா, யாரிடமாவது கொட்டி தீர்த்து விட மாட்டோமா என்று காத்திருந்தது போல, கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்தவற்றை சுருக்கமாக சொல்லி முடித்தாள்.

   

மைத்ரேயியின் முகத்தில் கோப்பும் வருத்தமும் ஒன்றாக தோன்றியது!

   

“இந்த மாதிரி எல்லாம் கூட ரூடான பீப்பிள் இருக்காங்களா! உங்க கம்பெனியை வாங்கின கம்பெனி பேர் என்ன??”

   

“எம்ஐ க்ரூப் ஆஃப் கம்பெனிஸ்... உங்களுக்கு தெரியுமான்னு தெரியலை... அதோட ஓனர் பேரு மித்ரன்... ரொம்ப வருஷம் கழிச்சு சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கார்ன்னு சேகர் சார் சொன்னார்...”

   

“ஓ...” என்றாள் மைத்ரேயி யோசனையுடன்.

   

“எங்க கம்பெனியை அவருக்கு வித்தது தப்பு! ஆனா அதை பத்தி பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை... இனி என்னன்னு தான் நான் யோசிக்கனும்... கோபி என் கூட இல்லைனாலும் அப்பப்போ ஏதாவது ஒரு விதத்தில் எனக்கு உதவிட்டு தான் இருக்கார்... இவ்வளவு வருஷம் கழிச்சு உங்க விசிட்டிங் கார்ட் என் கண்ணில பட்டது போல...”

   

சரண்யா தழுதழுத்த குரலில் சொல்ல, மைத்ரேயி அதை கவனிக்காதவளாக இன்னமும் யோசனையில் இருந்தாள்.

   

“மித்ரன்...! சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்க மித்ரன்...”

   

சரண்யா சொன்னதை மைத்ரேயியின் உதடுகள் முணுமுணுத்தன...

   

முதல் முறையாக மைத்ரேயியின் முகத்தில் இருந்த மலர்ச்சி காணாமல் போயிருந்தது...

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.