“அப்புறம் ஏன் சாப்பிட வரலை?”
“பசிக்கலை...”
“ஹ்ம்ம்... உங்களுக்கு பசிக்கலையா? ஓ... அது தானா எனக்கும் இன்னைக்கு பசிக்கவே இல்லை...”
சுமித்ரா பக்கம் திரும்பி, அவளின் இரண்டு தோளையும் கெட்டியாக பிடித்தவன், “நீ சாப்பிட்டியா இல்லையா?” என்றான்.
“ஹுஹும்... எனக்கும் பசிக்கலை... ஆனால் அதை பத்தி அப்புறம் பேசுவோம்... முதல்ல என்ன விஷயம்னு சொல்லுங்க...”
“எதை கேட்குற?”
“உங்க முகமே சரி இல்லை... வாடி இருக்கு... கண்ணெல்லாம் என்னவோ போல இருக்கு... எப்போவும் ரேஷ்மியை திட்ட மாட்டீங்க, இன்னைக்கு அவளையும் திட்டினீங்க... என்னை நேரா பார்த்து பேச மாட்டேங்குறீங்க... சொல்லுங்க என்ன விஷயம்?”
“சுமி! எதுவும் இல்லைன்னு சொல்றேன்ல...”
“ஓ... எதுவுமே இல்லையா... சரி...”
கோபத்துடன் அவனை விட்டு தள்ளி அமர்ந்தவள், தனக்கு தானே பேசிக் கொள்பவளை போல பேசினாள்...
“கல்யாணம் ஆகி எட்டு வருஷம் மேல ஆச்சு... இன்னைக்கு வரைக்கும் எதையும் நினைச்சு நான் குறை பட்டதில்லை... ஆஹா... எனக்கு தான் தங்கமான கணவர் கிடைச்சிருக்காருன்னு அப்படி ஒரு பெருமை... என் கமல் என் கிட்ட இருந்து எதையும் மறைக்கவே மாட்டார்...