(Reading time: 5 - 10 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

எல்லாத்தையும் அபபடியே என் கிட்ட சொல்லுவார்.... எல்லாம் என் நினைப்பு தான்... என் மேல தான் தப்பு...”

   

சுமித்ரா புலம்பித் தள்ள, கமலுக்கு இதயத்தில் எங்கோ வலித்தது...

   

“சுமி...”

   

அவனின் அழைப்பில் இருந்த வேறுபாடு புரிந்து அவனை ஆராய்ச்சியுடன் பார்த்தாள் சுமித்ரா...

   

“ஒன்னுமில்லைடா என்னை நம்பு...”

   

“பொய் பொய்யா சொலலாதீங்க... அப்புறம் உங்களை தனியா விட்டுட்டு நானும் ரேஷ்மி கூடவே கவிதா ரூமுக்கு போயிடுவேன்...”

   

“சுமி...”

   

மென்மையாக அழைத்தபடி மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான் கமல்...

   

“என்னை விட்டுட்டு போவேன்னு விளையாட்டுக்கு கூட சொல்லாதே...”

   

அவனின் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அவனின் கண்களை நேராக பார்த்த சுமித்ரா,

   

“அப்படி பயம் இருக்குல, அப்போ உண்மையை சொல்லுங்க... உங்க மனசை அரிச்சிட்டு இருக்க விஷயம் என்ன? என் கிட்ட சொல்லாம உங்களால மறைக்க முடியாது... சொல்லுங்க என்ன விஷயம்?” என்றாள்.

   

“அது... அது...”

   

“இங்கே பாருங்க... எதுவா இருந்தாலும் சொல்லுங்க... நீங்க சொல்லாம இருந்தா எனக்கு என்னவோ எதுவோன்னு பயமா இருக்கு...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.