சஜஷன் அவ்வளோ தான்... வசீகரன் ஃபேமிலியோட இருக்கும் போது சுபா எவ்வளவு ஹாப்பியா இருக்கான்னு நீயே பார்த்திருப்ப... அதே போல உன் மனைவியோடவும் இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொல்றேன்...”
“சஜஷன்னு இல்லப்பா... நீங்க சொன்னதையே mandatory condition ஆகவே வச்சுப்போம்... அம்மாக்கு பிடிச்ச, அம்மா கூட ஒத்து போற மாதிரியான பொண்ணா தேடி கண்டுப்பிடிப்போம்...”
தலை அசைத்ததற்கு மேல் பதில் ஒன்றும் சொல்லாமல் பிரகாஷ் அமைதியாக இருந்தார். சுபாஷினியின் மனதில் அக்ஷரா மருமகளாக வர வேண்டும் என்ற ஆசை இருப்பது அவருக்கு தெரியும். மனைவி வாய் திறந்து சொல்லாமலே அதை புரிந்து வைத்திருந்தார்! ஆகாஷிற்கு புரியுமா என்று தான் அவருக்கு தெரியவில்லை!
சில நிமிடங்களில் வாட்டர் ஜக்குடன் வந்த சுபாஷினி, “கல்யாணம் பத்தி பேசிட்டு இருங்கன்னு சொல்லிட்டு தானே போனேன்... ஏன் இரண்டு பேரும் அமைதியா இருக்கீங்க,” என்றாள்...
“அமைதியா இல்லம்மா யோசிச்சுட்டு இருந்தேன்... நான் ஒன்னு கேட்கட்டுமாம்மா???”
“என்ன ஆகாஷ்??? சொல்லு!”
“என்னை பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்...”
“தெரியும்...”
“எனக்கு ஏத்த மனைவி எப்படி இருப்பான்னு உங்களால கெஸ் செய்ய முடியும்னு நினைக்கிறேன்...”
“என்னடா... இவ்வளோ பெரிய பீடிகை??? கொஞ்சம் முன்னாடி யாரையும் லவ் செய்யலைன்னு சொன்ன???”
“இப்போவும் அதே தான் சொல்றேன்... ஆனால் ஒரு சின்ன தாட்...”