Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 19 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
வழக்கத்திற்கு மாறாக அமைதியாக வேலை செய்துக் கொண்டிருக்கும் சுமித்ராவை புரியாமல் பார்த்தாள் பூங்கோதை.
இரவில் கமல் கோபமாக இருந்தது ஞாபகத்திற்கு வரவும், மருமகளை உற்று கவனித்தாள்!
ஒருவேளை கமல் ரொம்பவும் திட்டி விட்டானோ??
அவளின் பார்வையை கூட கவனிக்காமல் சுமித்ரா ஸ்டவ்வின் மீதிருந்த பாத்திரத்தின் மீதே கவனத்தை வைத்திருக்கவும், அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல், “சுமி... கமல் ரொம்ப திட்டினானா??” என வினவினாள்.
கமலையும், ரேஷ்மியையும் பற்றி யோசித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த சுமித்ரா, யோசனையுடன் பூங்கோதையை பார்த்தாள்...
“ஏன் அத்தை அப்படி கேட்குறீங்க??? அவர் தேவை இல்லாம கோபப் பட மாட்டார்...”
“ஆமாம், அவன் கோபமே பட மாட்டான்!!!”
“அவரை உங்களுக்கு புரியலை அத்தை! நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. அவரு நீங்க நினைக்குற...”
பூங்கோதை பொறுமை இல்லாமல் சுமித்ராவின் பேச்சில் குறுக்கிட்டாள்.
“ப்ச்... எனக்காக சொல்லாதே சுமி... எனக்கு அவனை பத்தி நல்லாவே தெரியும்... என்ன ஏதுன்னு யோசிக்காமல் கத்துவான்... ஆனால், அவனை நான் எந்த முகத்தை வச்சுட்டு குறை சொல்லுறது??? சின்ன வயசுல அவனை நான் பார்த்துக்கலை... பெரியவனா ஆகுறதுக்கு முன்னாடியே குடும்ப பாரத்தை மட்டும் கொடுத்திட்டேன்... என்ன செய்றது... அவனை பத்தி தான் தெரியுமே... கோபப் பட்டு கத்துறது அவன் கூட பிறந்தது...”
“நீங்க சொல்றது பாதி சரி அத்தை. ஆனால்...”
Every line of last episode makes me cry for the most, felt like you would have saved her at least in the imagination, but that's not the reality as you finished 😔 thanks for not explaining how they struggled in her last days,, 'you are a great writer if your words brings emotions on viewers/audience' you achieved it great 👏🏻
Hi! 🤗 Your message truly means a lot to me! I'm so touched that the story resonated with you and brought out such deep emotions. Writing this part was really emotional for me too. Thank you for your kind words and for being such a thoughtful reader! 💕✨ Since this was a few episodes ago, I hope you've caught up with the latest ones. I would love to hear your thoughts! 😊